undefined

இன்றும் தமிழகம் முழுவதும் வாக்காளர் சிறப்பு முகாம்... பெயர் சேர்க்க, திருத்த, நீக்கம் செய்ய மறக்காதீங்க!

 
இன்றும் தமிழகம் முழுவதும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, திருத்த, விலாசம் மாற்ற என்று சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. நேற்று தமிழகம் முழுவதும் நடந்த சிறப்பு முகாமைப் பயன்படுத்த தவறியவர்கள் இந்த வாய்ப்பை நழுவ விடாதீங்க. இது குறித்து பெருநகர சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், நவம்பர் 1ம் தேதி  சனிக்கிழமை தகுதி ஏற்படுத்தும் நாளாக கொண்டு வாக்காளர் பட்டியலில் திருத்தம் மேற்கொள்ளும் வகையில் சென்னை மாவட்டத்தில் உள்ள 16 சட்டமன்ற தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் 29.10.2024 அன்று வெளியிடப்பட்டது.

இந்த வரைவு வாக்காளர் பட்டியல் சென்னை மாநகராட்சி மண்டல அலுவலகங்கள் 4, 5, 6, 8, 9, 10, 13 மற்றும் அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்களது பெயர் மற்றும் குடும்பத்தினர் பெயர் விவரங்கள் வரைவு வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளனவா? என்பதை சரி பார்த்து கொள்ள வேண்டும் என வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.  

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல், முகவரி மாற்றம் செய்தல் போன்றவற்றை வாக்காளர்கள் மேற்கொள்வதற்கு வசதியாக நவம்பர் 17ம் தேதி மற்றும் 23, 24  தேதிகளில் சென்னை மாவட்டத்திற்கு உட்பட்ட 947 வாக்குச்சாவடி மையங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளன.

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்படாமல் உள்ளவர்கள் மற்றும் 1.1.2025 அன்று 18 வயது பூர்த்தி அடைபவர்கள் (1.1.2007ம் தேதிக்கு முன்பாக பிறந்தவர்கள் மற்றும் 17 வயது நிரம்பி 18 வயது பூர்த்தி அடையும் நிலையில் உள்ளவர்களும்) படிவம்-6 மூலம் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்துக் கொள்ளலாம்.  

பெயர் நீக்கம் மற்றும் சட்டமன்ற தொகுதிக்குள்ளேயே ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு குடிபெயர்ந்து புதிய வசிப்பிடத்தில் உள்ளவர்கள், மேலும் வேறு தொகுதிக்கு குடிபெயர்ந்தவர்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க மற்றும் திருத்தங்கள் செய்ய உரிய படிவத்தை பூர்த்தி செய்து அதற்கான ஆதாரத்தை இணைத்து அளிக்க வேண்டும்.

சிறப்பு முகாம் மட்டுமின்றி  பெருநகர சென்னை மாநகராட்சி மண்டல அலுவலரின் அலுவலகத்தில் 28ம் தேதி வரை  விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், http://voters.eci.gov.in/ என்ற இணையதளம் மூலம் பெயர்கள் சேர்க்கவும், நீக்கவும், திருத்தங்களை மேற்கொள்ளலாம்.  இன்றும் இந்த சிறப்பு முகாம்கள் தமிழகம் முழுவதும் நடைபெற உள்ளது. அதைப் போலவே அடுத்த சனி, ஞாயிறு கிழமைகளிலும் நடைபெற உள்ளது. அதனால் இந்த வாய்ப்பை மறக்காமல் பயன்படுத்திக்கோங்க.

கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!