undefined

 நாளை எழும்பூர் , கடற்கரை இடையே கூடுதல் பேருந்துகள்... ரயில் பயணிகளே  குறிச்சிக்கோங்க!

 


சென்னையில்  கடற்கரை - எழும்பூர் இடையே நாளை அக்டோபர் 27ம் தேதி  கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் என  மாநகர போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது. இது குறித்து  வெளியிட்டுள்ள அறிக்கையில், நாளை 27ம் தேதி  சென்னை கடற்கரை மற்றும் எழும்பூர் ரயில் நிலையங்களுக்கு இடையே புதிய ரயில்வே தண்டவாளம் அமைக்கும் பணி சென்னை கடற்கரை யார்ட்டில் நடைபெற உள்ளது.

இதனையடுத்து  காலை 4 மணி முதல் மாலை 5 மணி வரை சென்னை கடற்கரை ரயில் நிலையத்திலிருந்து தாம்பரம்-செங்கல்பட்டு செல்லும் ரயில்கள் ரத்து செய்யப்படும்.  சென்னை பூங்கா ரயில் நிலையத்திலிருந்து தாம்பரம்-செங்கல்பட்டிற்கு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. 


எனவே, அவ்வழித்தடத்தில் பயணம் செய்யும் பயணிகள் நலன் கருதி மாநகர போக்குவரத்து கழகம் அக்டோபர் 27ம் தேதி  சென்னை கடற்கரை ரயில் நிலையத்திலிருந்து சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திற்கு கூடுதலாக 6 பேருந்துகள் இயக்கப்படும் என மாநகர போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.  மேலும் நாளை  கடற்கரை ரயில் நிலைய பேருந்து நிறுத்தம், எழும்பூர் மற்றும் பூங்கா ரயில் நிலைய பேருந்து நிறுத்தங்களில் அலுவலர்களை நியமித்து இப்பேருந்துகள் இயக்கத்தினை கண்காணிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.  

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...

 ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!