ஏப்ரல் 17, 18ம் தேதிகளில் தமிழகம் முழுவதும் 2000 சிறப்பு பேருந்துகள்!

 

 மக்களவை தேர்தலை பாதுகாப்பாவும், சீரிய முறையில்  நடத்தும் வகையில் தேர்தல் ஆணையம் அனைத்து கட்ட பணிகளையும் தீவிரமாக செயல்படுத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக தமிழகத்தில் அரசு போக்குவரத்து கழகம்  ஏப்ரல் 17, 18 தேதிகளில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு மற்றும்  விளவங்கோடு சட்டப்பேரவை தொகுதிக்கு வரும் 19ம் தேதி ஒரே கட்டமாக நடத்தப்பட உள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர் இடையே 4 முனைப்போட்டி நிலவுகிறது. இதனால் அரசியல் கட்சிகள் தேர்தல் பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.  


இந்நிலையில், தமிழ்நாட்டில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறும் நாளில் ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும் இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி உள்ளது. அதன்படி வாக்குப்பதிவு நாளில்  ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும் என தமிழ்நாடு தொழிலாளர் நலத்துறை அறிவுறுத்தியுள்ளது.  இந்நிலையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சென்னை உட்பட பெருநகரங்களில் பணியாற்றி வருபவர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்று வாக்களிக்க ஏதுவாக ஏப்ரல் 17, 18ம் தேதிகளில் அரசு போக்குவரத்து கழகங்கள் சார்பில் 2,000க்கும் மேற்பட்ட சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.


இதுகுறித்து போக்குவரத்து கழக அதிகாரிகள் ”100 சதவீத வாக்குப்பதிவு என்ற இலக்கை எட்ட வேண்டும் என தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.  பொதுமக்கள் தங்களுக்கு ஓட்டு உள்ள ஊர்களுக்கு சென்று வாக்களிக்க வசதியாக, தமிழகம் முழுதும் சிறப்பு பேருந்துகளை இயக்கப்பட உள்ளன. அதன்படி ஏப்ரல் 17, 18ம் தேதிகளில் மாவட்டங்கள் தோறும் பயணிகளின் தேவைக்கு ஏற்ப நாள் முழுவதும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்.  சென்னையில் இருந்து தமிழகத்தின் பிற பகுதிகள்  மற்றும் மாவட்டங்களுக்கு 2,000க்கும் மேற்பட்ட சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்.  அரசு விரைவு பேருந்துகளில், 60 நாட்களுக்கு முன்பே டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதி இருப்பதால் பொதுமக்கள் முன்பதிவு செய்து கொள்ளலாம். அதிகாரப்பூர்வ இணையதளமான  www.tnstc.in இணையதளம் மற்றும் டிஎன்எஸ்டிசி செயலி வாயிலாக முன்பதிவு செய்து பயணத்தை திட்டமிட்டுக் கொள்ளலாம்” எனத் தெரிவித்துள்ளது.  

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்