undefined

சென்னையில் “எஸ்.பி.பாலசுப்பிரமணியம் சாலை’’.. மகனின் கோரிக்கை ஏற்று முதல்வர் அறிவிப்பு... ரசிகர்கள் மகிழ்ச்சி!

 

இனி சென்னை நுங்கம்பாக்கத்தில் காம்தார் நகர் முதல் தெரு கிடையாது. எஸ்.பி.பி. வாழ்ந்த தெருவுக்கு, அவரின் நினைவைப் போற்றும் வகையில், “எஸ்.பி. பாலசுப்பிரமணியம் சாலை” எனப் பெயர் சூட்டப்படும் என்று தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் நேற்று அறிவித்திருந்தார். 

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், “பல்வேறு மொழிகளில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடி, தன்னுடைய அமுதக் குரலால் தமிழ் மக்களின் நெஞ்சங்களில் அரை நூற்றாண்டுக்கும் மேலாக இசை மழை பொழிந்ததோடு, பல படங்களுக்கு இசையமைத்தும், திரைப்படங்களில் நடித்தும், பல்துறை வித்தகராக விளங்கியவரும், ஒன்றிய அரசின் பத்மஸ்ரீ, பத்மவிபூஷன் விருதுகள் பெற்றவரும், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் அன்பிற்குரியவருமான திரு.எஸ்.பி.பாலசுப்பிரமணியம் அவர்கள், கடந்த 25-9-2020 அன்று இதே நாளன்று நம்மை விட்டுப் பிரிந்தார்.

காலம் அவரைப் பிரித்தாலும், நம் அனைவரின் மனதிலும் நீங்கா இடம் பெற்றவர் அவர். அன்னார் தமிழ்த் திரையுலகிற்கு ஆற்றிய சேவையைப் போற்றும் வகையிலும், அவரின் புகழுக்கு மேலும் சிறப்பு சேர்க்கும் வகையிலும், அவர் வாழ்ந்த இல்லம் அமைந்துள்ள நுங்கம்பாக்கம் காம்தார் நகர் முதல் தெருவிற்கு, "எஸ்.பி. பாலசுப்பிரமணியம் சாலை” எனப் பெயரிடப்படும் என மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின்அறிவித்துள்ளார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கடந்த சில தினங்களுக்கு முன்பு, தனது தந்தையின் பெயரை அவரது வீடு இருக்கும் தெருவுக்கு சூட்ட வேண்டும் என்று எஸ்.பி.பி. சரண் முதல்வரிடம் கோரிக்கை வைத்திருந்த நிலையில், இதற்கான உத்தரவு நேற்று எஸ்.பி.பி.யின் நினைவு நாளில் பிறப்பிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசி மாதத்தில் ஏன் அசைவம் சாப்பிடக்கூடாது ... விஞ்ஞான விளக்கம்!