undefined

 பகீர் வீடியோ...பெண்ணாக மாறிய இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரரின் மகன்!

 

 இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் சஞ்சய் பங்கரின் மகன் ஆர்யன்.  இவர் இந்திய அணியின் முன்னாள் பேட்டிங் பயிற்சியாளருமாவார்.  இவர் சமீபத்டில் தான் ஹார்மோன் மாற்று சிகிச்சை எடுத்துக் கொண்டு பெண்ணாக மாறியதை அறிவித்துள்ளார். இது குறித்து தன்னுடைய  இன்ஸ்டாகிராம் பக்கத்தில்  வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

சில ஆண்டுகளுக்கு முன்பே தன்னை பெண்ணாக மாற்றிக் கொண்டிருக்கிறார். இது குறித்த  புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.ஆனால், அது சஞ்சய் பங்கரின் மகன் ஆர்யன் என்பது யாருக்கும் தெரியவில்லை. தற்போது அவர் வெளியிட்டிருக்கும் வீடியோவில் ஆணாக இருந்தபோது இந்திய கிரிக்கெட் வீரர்களுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.

சஞ்சய் பங்கரின் மகன் ஆர்யன் தான் தற்போது பெண்ணாக மாறி இருக்கிறார் என்பது வெளி உலகத்திற்கு தெரிய வந்துள்ளது. ஆர்யன் என்ற தனது பெயரை அனயா என மாற்றிக் கொண்டு இருக்கிறார். தான் பெண்ணாக உணர்ந்ததை அடுத்து  ஹார்மோன் மாற்று சிகிச்சை மேற்கொண்டு தற்போது பெண்ணாக மாறி இருக்கிறார். இந்த தகவல் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. பலரும் அவரது முடிவுக்கு வாழ்த்துகளை கூறி வருகின்றனர்.

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...

 ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!