undefined

மாஸ் வீடியோ... சோலார் பேனல் சூரியனை நோக்கி திரும்புதல்!!

 

உலகில் முதன் முறையாக நிலவின் தென் துருவத்தை ஆராய்ச்சி செய்ய சந்திராயன் 3 விண்ணில் ஏவப்பட்டது. இஸ்ரோவால் உருவாக்கப்பட்ட சந்திரயான் 3 விண்கலத்துடன் இணைக்கப்பட்டிருந்த லேண்டர் ஆகஸ்ட் 23ம் தேதி  நிலவில்  தரையிறங்கியது.  ரோவரும் பிரிந்து வெளியேறி விண்கலத்தின் அனைத்து கருவிகளும் செயல்பாட்டுக்கு வந்து விட்டதாக இஸ்ரோ நேற்று அறிவித்தது.  

குறிப்பாக   நிலவின் தரைப்பகுதியில் ரோவரின் இயக்கம் நேற்று தொடங்கியுள்ளது.  லேண்டரில் இருந்த இல்சா, ரம்பா, காஸ்டே   கருவிகள் நேற்று இயக்கப்பட்டன.  இந்நிலையில், பிரக்யான் ரோவரின் சோலார் பேனல் சூரியனை நோக்கி திரும்பிய வீடியோவை இஸ்ரோ வெளியிட்டுள்ளது.

சாய்வு தளத்தில் இருந்து ரோவர் உருண்டு வரும்போது, ரோவரின் சோலார் மின் தகடுகள் திரும்பியுள்ளன.  ரோவர் இயங்குவதற்கு தேவையான மின்சார சக்தியை பெறுவதற்காக சோலார் மின் தகடு சூரியனை நோக்கி திரும்பியது என இஸ்ரோ தெரிவித்துள்ளது. மேலும், சாய்வு தளம் மூலம் லேண்டரில் இருந்து ரோவர் கலன் எளிமையாக நிலவில் இறங்கியதாகவும் இஸ்ரோ அறிவித்துள்ளது.
 

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை