நாளை சூரிய கிரகணம்... முடிந்ததும் இதை செய்ய மறக்காதீங்க!
நாளை அக்டோபர் 2ம் தேதி புதன்கிழமை மகாளய அமாவாசை நாளில் இந்த ஆண்டின் கடைசி சூரிய கிரகணம் . இந்த சூரிய கிரகணம் சுமார் 6 மணிநேரம் 4 நிமிடங்கள் நீடிக்கும். இந்த சூரிய கிரகண காலத்தின்போது மகாளய அமாவாசையும் வருகிறது. சூரிய கிரகணம் எப்போதும் அமாவாசை நாளிலும், சந்திர கிரகணம் எப்போதும் பௌர்ணமி நாளிலும் ஏற்படுகிறது.
சூரிய கிரகணத்திற்கு 12 மணிநேரத்திற்கு முன்பு சூதக் காலம் தொடங்குகிறது. இந்த நேரத்தில் எந்த சுப காரியம் மேற்கொள்ள வேண்டாம். இந்த நேரத்தில் உணவு தயாரித்தல், உண்ணுதல், வழிபாடு இவைகளை செய்யக்கூடாது. சூரிய கிரகணம் நிகழும் நேரம் என்ன?, சூதக் காலம் எப்போது தொடங்குகிறது? சூரிய கிரகணம் முடிந்ததும் என்ன செய்ய வேண்டும்? என பூரியில் உள்ள மத்திய சமஸ்கிருத பல்கலைக்கழகத்தின் ஜோதிடர் டாக்டர் கணேஷ் மிஸ்ரா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இந்த ஆண்டின் கடைசி சூரிய கிரகணம் நாளை அக்டோபர் 2ம் தேதி இரவு 9:13 மணிக்கு நிகழும். இந்த சூரிய கிரகணம் அக்டோபர் 3ம் தேதி, வியாழக்கிழமை அதிகாலை 3:17 மணிக்கு முடிவடையும். இந்த சூரிய கிரகணம் மொத்தம் 6 மணிநேரம் 4 நிமிடங்கள் நீடிக்கும்.
இந்த சூரிய கிரகணம் சிலி, அர்ஜென்டினா, பிரேசில், மெக்சிகோ, உருகுவே, பெரு, நியூசிலாந்து, பிஜி, ஈக்வடார், அண்டார்டிகா, டோங்கா, அமெரிக்கா, பராகுவே போன்ற இடங்களில் இந்த சூரிய கிரகணம் தெரியும். இருப்பினும், சிலி மற்றும் அர்ஜென்டினாவில் முழு சூரிய கிரகணத்தை கண்களால் காணலாம்.இந்த சூரிய கிரகணத்தை இந்தியாவில் காண முடியாது.
சூரிய கிரகணத்திற்கு பின் செய்ய வேண்டிய 5 விஷயங்கள்:
சூரிய கிரகணம் முடிந்தவுடன், கங்கை நீரால் பூஜை அறையுடன் வீடு முழுவதையும் சுத்தம் செய்யவும்.
குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் குளித்துவிட்டு சுத்தமான ஆடைகளை அணிய வேண்டும். அத்துடன் பழைய துணிகள் அனைத்தையும் சுத்தம் செய்ய வேண்டும். சூரிய கிரகணம் முடிந்ததும், பூஜை அறையில் உள்ள தெய்வங்களுக்கு அபிஷேகம் செய்து புது ஆடை மாற்ற வேண்டும். அவர்களை வணங்கி, அன்னதானம் செய்து, ஆரத்தி எடுக்கலாம். அப்போது ஒலிக்கும் மணி சத்தம் கிரகணத்தின் எதிர்மறை விளைவை நீக்குகிறது.
வழிபாட்டுக்கு பிறகு கோதுமை, சிவப்பு ஆடைகள், சிவப்பு பழங்கள், சிவப்பு மலர்கள் இவைகளை தானம் செய்யலாம். இவை அனைத்தும் சூரிய பகவானுடன் தொடர்புடையவை. கிரகணம் முடிந்த பிறகுதான் உணவு சமைக்க வேண்டும் அல்லது சாப்பிட வேண்டும். அதில் துளசி இலைகளையும் சேர்த்துக் கொள்ளலாம்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!