undefined

பெண்கள் கல்லூரியின் கழிவறையில் கொத்து கொத்தாக பாம்புகள்... பதறியடித்து ஓடிய மாணவிகள்!

 

மகளிர் கல்லூரியின் கழிவறையில் கொத்து கொத்தாக பாம்புகள் நெளிந்து கொண்டிருக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து கல்லூரி நிர்வாகத்தினரும், அரசு அதிகாரிகளும் அலட்சியம் செய்து வருகின்றனர். இத்தனைக்கும் அருகிலேயே விழுப்புரத்தில் தான் உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி இருக்கிறார். இந்த பக்கம் மூத்த அமைச்சர் துரை முருகன் வேலூரில் இருக்கிறார். திருவண்ணாமலையில் மூத்த அமைச்சர் எ.வ.வேலு வசிக்கிறார். 

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு ஆற்காடு சாலையில் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரி அமைந்துள்ளது. இக்கல்லூரியில் காலை மதியம் என இரண்டு சிப்டுகளாக சுமார் 8000 மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில் கல்லூரியில் உள்ள பெண்கள் கழிப்பறை நீண்ட நாட்களாக பயன்பாடின்றி உள்ளது.  நேற்று அந்த கழிவறைக்கு  சில பெண்கள் சென்றுள்ளனர்.

அங்கு சென்ற போது ஒரு கழிவறையில் சாரை சாரையாக பாம்புகள் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்து கூச்சலிட்டு வெளியே வந்தனர் . மற்ற  சக மாணவ, மாணவர்களிடம் தெரிவித்துள்ளனர்.இதற்கிடையே சில மாணவர்கள் பாம்பு இருந்ததை தங்களது செல்போனில் படம் பிடித்து சமூக வலைதளங்களில் வீடியோவை பதிவிட்டனர்.

அதனை தொடர்ந்து கல்லூரி நிர்வாகம் தீயணைப்பு வீரர்கள் மற்றும் பாம்புபுடி நபர்களை கொண்டு கழிவறையில் பாம்புகளை தேடத் தொடங்கினர்.   சில பாம்புகள் மட்டும் பிடிபட்டதாகவும் மற்ற பாம்புகளை தேடி வருவதாகவும்  தீயணைப்பு வீரர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். அரசு கல்லூரி பெண் கழிவறையில் சாரையாக பாம்புகள் இருந்த சம்பவம் கல்லூரி வளாகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆவணி மாத சிறப்புக்கள் , வழிபாடுகள், பண்டிகைகள்!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா