அங்கன்வாடி சத்துணவில் இறந்து கிடந்த பாம்பு.. பெற்றோர்கள் அதிச்சி!

 

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள அங்கன்வாடிகளில் கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் 6 மாதம் முதல் 3 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு சத்துணவு திட்டத்தின் கீழ் பொட்டல உணவு வழங்கப்படுகிறது. இந்நிலையில், சாங்கிலி மாவட்டம், பலாஸ் பகுதிக்கு உட்பட்ட அங்கன்வாடியில், கடந்த 1ம் தேதி, குழந்தைக்கு வழங்கப்பட்ட உணவு பொட்டலத்தில், குட்டி பாம்பு கிடந்ததை கண்டு, பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர்.

புகாரின் பேரில், சாங்கிலி மாவட்ட ஆட்சியர் ராஜ தயாநிதி விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து, உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள், சமந்தா அங்கன்வாடியில் ஆய்வு நடத்தி, உணவை ஆய்வக பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து உணவு பொட்டலங்கள் வைக்கப்பட்டிருந்த குடோனுக்கு சீல் வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இதனிடையே,  அம்மாநிலத்தில் நடைபெற்று வரும் சட்டப்பேரவை கூட்டத்தில் பாலஸ் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினர் விஸ்வஜித் இந்த விவகாரத்தை எழுப்பியுள்ளார். முன்னதாக, சிறுதானிய வகை உணவுகள் தனித்தனியாக வழங்கப்பட்ட நிலையில், தனியார் நிறுவனம் ஒன்று சில மாதங்களுக்கு முன்பு கலப்பு உணவு வழங்கத் தொடங்கியதாகவும், அந்த நிறுவனம் தரமற்ற உணவுகளை வழங்குவதாகவும் விஸ்வாஜிக் குற்றம் சாட்டியுள்ளார்.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!