18 வயதுக்கு கீழ்  புகைப்பிடிக்க அனுமதி கிடையாது... பிரதமர் அதிரடி உத்தரவு..!!

 

இங்கிலாந்து மான்செஸ்டரில் புதன் கிழமை அன்று நடந்த கன்சர்வேட்டிவ் கட்சி மாநாட்டில் நாட்டின் பிரதமர் ரிஷி சுனக் பேசினார். அப்போது பேசிய அவர்,  “இன்றைக்கு முதல் 14 வயதுடையவர்களுக்கு ஒருபோதும் சட்டப்பூர்வமாக சிகரெட் விற்கப்படாது, அவர்களும் அவர்களது தலைமுறையும் புகையின்றி வளர முடியும்”. இந்த மாற்றங்கள் பாராளுமன்றத்தில் வாக்கெடுப்புக்கு உட்படுத்தப்படும் என்பதுடன், பொது இடங்களில் புகைபிடிப்பதைத் தடைசெய்தது, புகைபிடிக்கும் வயதை 18 ஆக உயர்த்தியுள்ளது.

வருடாந்திர டோரி கட்சி மாநாட்டில் இன்று உரையாற்றிய பிரதமர் சுனக், “அடுத்த தலைமுறைக்கு முதலிடம் கொடுக்கும்” திட்டங்களின் கீழ் vapes கிடைப்பதை கட்டுப்படுத்துவதாகவும் உறுதியளித்தார். “தற்போது புகைபிடிக்கும் எவருடைய உரிமையையும் பறிப்பது” நியாயமாகாது. எனினும், பதின்வயதினர் புகைப்பிடிப்பதை தடுக்க இன்னும் பலவற்றைச் செய்ய முடியும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

“எதிர்காலத்தில் ஒவ்வொரு ஆண்டும் புகைபிடிக்கும் வயதை ஒரு வருடமாக உயர்த்துவதாக முன்மொழிகிறேன்,” என்று அவர் கட்சி பிரதிநிதிகளிடம் தெரிவித்துள்ளாார்.“அதாவது இன்று 14 வயதானவர்களுக்கு சிகரெட்டை ஒருபோதும் சட்டப்பூர்வமாக விற்க முடியாது, மேலும் அவர்களும் அவர்களது தலைமுறையும் புகைபிடிக்காமல் வளர முடியும்.” என்று பிரதமர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

“மக்கள் இளமையாக இருக்கும்போது புகைப்பிடிக்கின்றனர். ஐந்தில் நான்கு பேர் 20 வயதிற்குள் புகைபிடிக்கத் தொடங்கிவிட்டனர். பின்னர் பெரும்பான்மையானவர்கள் வெளியேற முயற்சி செய்கிறார்கள்.ஆனால் பலர் தோல்வியடைகிறார்கள், ஏனென்றால் அவர்கள் அடிமையாகிவிட்டதால் அதிலிருந்து விடுபட முடிவதில்லை என பிரதமர் வலியுறுத்தியுள்ளார்.

அதனை நாம் மாற்றி அமைக்க வேண்டும், தொடக்கத்தை நிறுத்த முடிந்தால், நம் நாட்டில் தடுக்கக்கூடிய மரணம் மற்றும் நோய்க்கான மிகப்பெரிய காரணத்தை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான பாதையில் இருப்போம்.” என பிரதமர் சுனக் கூறியுள்ளார். இதேவேளை, 2030 ஆம் ஆண்டிற்குள் இங்கிலாந்தை புகைப்பிடிக்காத நாடாக மாற்ற 2019 ஆம் ஆண்டில் அரசாங்கம் இலக்கை நிர்ணயித்துள்ளது.

இங்கிலாந்தில் ஒவ்வொரு ஆண்டும் ஐந்தில் ஒரு புற்றுநோய் மற்றும் நான்கு புற்றுநோய் இறப்புகளில் ஒன்றுக்கு மேற்பட்டவை புகைபிடிப்பதால் ஏற்படுகிறது.இங்கிலாந்தில் கிட்டத்தட்ட ஆறு மில்லியன் மக்கள் இன்னும் புகைப்பிடிக்கிறார்கள். புகைபிடிக்கும் சமுதாயத்திற்கு ஆண்டுக்கு சுமார் 17 பில்லியன் பவுண்ட் செலவழிக்கப்படுதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.