undefined

 ரயிலில்   தூங்கும் நேரம் மாற்றம்... ரயில்வே அதிரடி அறிவிப்பு!  

 

  

இந்தியாவில் நீண்ட தூர பயணங்களுக்கு பெரும்பாலான மக்கள் ரயில் பயணங்களையே நம்பியுள்ளனர். குறைவான கட்டணத்தில் பாதுகாப்பான பயணங்கள் இருப்பதால்  பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தும் போக்குவரத்து சாதனமாக ரயில் இருக்கிறது. ஒவ்வொரு நாளும் பல லட்சம் பயணிகள் பயணித்து வருகின்றனர். இந்நிலையில் பயணிகளுடைய தூங்கும் நேரம் மாற்றப்பட்டு இருப்பதாக இந்தியன் ரயில்வே அறிவித்துள்ளது. இது குறித்து வெளியிட்ட செய்திக்குறிப்பில் “ ஸ்லீப்பர் மற்றும் ஏசி பெட்டிகளில் நடுத்தர பெர்த் ஒதுக்கப்பட்ட பயணிகள் எட்டு மணி நேரம் மட்டுமே தூங்க வேண்டும்.

முன்பு இந்த நேரம் 9 மணியாக இருந்த நிலையில் தற்போது இரவு 9 மணி முதல் காலை 6 மணி வரை மட்டுமே தூங்க முடியும் என நிலை இருந்து வருகிறது. “ இந்த விதி தற்போது நடுத்தரப் பெர்த் இரவு 10 மணிக்கு பிறகு தான் திறக்க முடியும். காலை 6 மணிக்கு நடுத்தர பெர்த்தை  மூடி விட வேண்டும். மிடில் பெர்த் பயணிகள் பகலில் தூங்கக் கூடாது. இதன் மூலமாக கீழ்ப் பெர்த் பயணிகள் 8 மணி நேரத்துக்கு பிறகு நடு பெர்த்தை மூடுமாறு கேட்கலாம்.

அதற்கான உரிமை உள்ளது.  மேல் பெர்த்தில் உள்ள பயணிகள் பகல் நேரத்தில் கீழ்ப் பெர்த்தில் அமர்ந்து கொள்ளலாம். அதே நேரத்தில் மாற்றுத்திறனாளிகள், கர்ப்பிணி பெண்கள் மற்றும் நோய்வாய்ப்பட்டவர்கள் நீண்ட நேரம் தூங்குவதற்கு சக பயணிகள் அனுமதிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!