undefined

பெண்களே உஷார்.. கருத்தடை மாத்திரையால் விபரீதம்... கர்ப்பிணி வயிற்றில் எலும்புக்கூடாய் உருக்குலைந்த குழந்தை!

 

ஸ்மார்ட் செல்போன்கள் வந்த பின்னர், நம்மில் பெரும்பாலானோர் கூகுள் டாக்டர்களாகவே மாறி விட்டோம். ஆன்லைனில் மருந்துகளை ஆர்டர் செய்வது, மொபைல் ஆப்களில் நம் உடல்நலனுக்கு நாமே ஆப்பு வைத்துக் கொள்வது, சமயங்களில் உயிருக்கே உலை வைத்துக் கொள்வது வரை இது நீள்கிறது. இந்நிலையில், கர்ப்பத்தைத் தடுக்கும் கருத்தடை மாத்திரைகளை சாப்பிட்ட இளம்பெண்  தன் உயிருக்கே ஆபத்தான நிலைக்கு சென்றிருக்கிறார். கருத்தடை மாத்திரைகளைச் சாப்பிட்ட இளம்பெண்ணின் வயிற்றில் குழந்தையின் எலும்புக்கூடு மட்டும் கிடந்துள்ளது மருத்துவர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த 27 வயது இளம் பெண்ணுக்கு ஏற்கனவே திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் மூன்றாவது குழந்தை வேண்டாம் என முடிவு செய்து, மருந்து கடையில் கருக்கலைப்பு மாத்திரைகளை வாங்கி சாப்பிட்டு வந்துள்ளார்.

கருக்கலைப்பு மாத்திரையை சாப்பிட்ட இளம்பெண் சில நாட்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டதாகவும், இதனால் கரு பாதியளவு மட்டுமே கலைந்ததாகவும் கூறப்பட்டது. இதையடுத்து அந்த பெண்ணின் வயிற்றை மருத்துவர்கள் ஸ்கேன் செய்து பார்த்த போது கருவில், குழந்தையின் எலும்புக்கூடு மற்றும் வயிறு இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து உடனடியாக அறுவை சிகிச்சை செய்து குழந்தையின் எலும்பு கூட்டை இளம்பெண்ணின் வயிற்றில் இருந்து அகற்றினர்.

இளம்பெண் என்பதால் பெரியளவில் பிரச்சனை இல்லாமல் சரி செய்யப்பட்டது என்றும், தற்போது அவர் ஆரோக்கியமாக இருப்பதாகவும், மருத்துவரின் பரிந்துரை சீட்டு இல்லாமல் கர்ப்பத்தடை மாத்திரைகளை தானே உட்கொள்வது பேரழிவை ஏற்படுத்தும் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆவணி மாத சிறப்புக்கள் , வழிபாடுகள், பண்டிகைகள்!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா