undefined

கர்ப்பிணி வயிற்றில் இறந்த குழந்தையின் எலும்புக்கூடு.. பார்த்து ஷாக்கான மருத்துவர்கள்!

 

கர்ப்பத்தைத் தடுக்கும் கருத்தடை மாத்திரைகளை இளம் பெண் சாப்பிட்ட நிலையில், வயிற்றில் குழந்தையின் எலும்புக்கூடு மட்டும் கிடந்தது மருத்துவர்களை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த 27 வயது இளம் பெண்ணுக்கு ஏற்கனவே திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் மூன்றாவது குழந்தை வேண்டாம் என முடிவு செய்து, மருந்து கடையில் கருக்கலைப்பு மாத்திரைகளை வாங்கி சாப்பிட்டு வந்துள்ளார்.

கருக்கலைப்பு மாத்திரையை சாப்பிட்ட இளம்பெண் சில நாட்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டதாகவும், இதனால் கரு பாதியளவு மட்டுமே கலைந்ததாகவும் கூறப்பட்டது. இதையடுத்து அந்த பெண்ணை டாக்டர்கள் ஸ்கேன் செய்து பார்த்தபோது குழந்தையின் எலும்புக்கூடு மற்றும் வயிறு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, உடனடியாக அறுவை சிகிச்சை செய்து குழந்தையின் எலும்பு கூட்டை அகற்றினர்.

இளம் பெண்ணாக இருந்த அவர் ஆரோக்கியமாக இருப்பதாகவும், மருத்துவரின் பரிந்துரை சீட்டு இல்லாமல் கர்ப்பத்தடை மாத்திரைகளை தானே உட்கொள்வது பேரழிவை ஏற்படுத்தும் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை