undefined

  இன்று டிஎன்பிஎஸ்சி  தலைவராக எஸ்.கே.பிரபாகர் பொறுப்பேற்றார்!  

 

தமிழகத்தில் டிஎன்பிஎஸ்சியின் தலைவராக இருந்தவர் பாலச்சந்திரன். இவர் ஓய்வு பெற்றதையடுத்து  புதிய தலைவராக எஸ்.கே.பிரபாகர் நியமிக்கப்பட்டார். பிரபாகர் சென்னை பாரிமுனையில் உள்ள தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய அலுவலகத்தில், டிஎன்பிஎஸ்சியின் 27வது தலைவராக   இன்று பொறுப்பேற்றுக்கொண்டார்.  இவர் வரும் 2028 வரை பதவியில் நீடிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  
 
பதவியேற்ற பிறகு எஸ்.கே.பிரபாகர், “தமிழ்நாடு அரசுப் பணிகளில் சேர வேண்டும் என்ற கனவோடு அரசு பணியாளர் தேர்வுகளை எழுதி வருகின்றனர்.  அரசு பணியாளர் தேர்வாணையம் கால அட்டவணை தேர்வு செய்து நடத்தி வருகிறது. இந்த தேர்வுகளை நேர்மையாக நடத்த தலைவர் என்ற முறையில் நான் உறுதியளிக்கிறேன். இந்த தேர்வுகளின் முடிவுகளும் உடனடியாக வெளியிட அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்.  டிஎன்பிஎஸ்சி தேர்வுகளை தாண்டி மற்ற  போட்டி தேர்வுகளையும் மாணவர்கள் எழுதுகிறார்கள். இரு தேர்வுகள் ஒரே நாளில் இல்லாதவாறு பார்த்துக் கொள்கிறோம். தமிழ்நாடு அரசு பணியில் சேர வேண்டும் என்ற ஆர்வம் உள்ள மாணவர்களுக்கு கனவுகள் நிறைவேற அனைத்து பணிகளையும் தமிழக அரசு மேற்கொள்ளும். 2 வாரங்களாக  பலவகைகளிலும் ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருகின்றன. தேர்வுகள் எழுதி முடித்ததும் அதற்கான முடிவுகள் உடனடியாக வெளியானால் மட்டுமே இந்தப் பணிக்காக காத்திருப்பதா வேறு முயற்சிகளை மேற்கொள்ளலாமா என்பது குறித்த முடிவுகளை எடுக்க முடியும் 


நடப்பு சிக்கல்களை களையவும், தேவைகளின் அடிப்படையில்  கவனித்து அதை மாற்றியமைக்கவும்  முயற்சி எடுத்து வருகிறோம். தேர்வுக்கும், தேர்வு முடிவுகளுக்கும் இருக்கும் இடைவெளியை நிச்சயம் குறைக்க நடவடிக்கை எடுப்போம். கால தாமதத்தை குறைப்பது தான் எங்களது முதல் பணி. ஒவ்வொரு தேர்வுக்கும் ஒவ்வொரு ஆண்டும் குறிப்பிட்ட நாட்களில் தேர்வு எழுத நடைமுறை கொண்டுவர வேண்டும். தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் பெரிய புகார்கள் இல்லாமல் தரமான முறையில் அரசு தேர்வுகள் நடத்தி வருகிறது. இதை மேம்படுத்துவதற்கான  நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது” எனத் தெரிவித்துள்ளார்.  

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை