undefined

நடுக்கடலில் படகு பழுதாகி 6 மீனவர்கள் தவிப்பு... மீட்பு பணிகள் தீவிரம்!

 

தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற போது நடுக்கடலில் படகு இன்ஜின் பழுதாகி, 6 மீனவர்கள் நடுக்கடலில் தத்தளித்து வரும் நிலையில், மீனவர்களை மீட்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. 

தூத்துக்குடி திரேஸ்புரம் நாட்டுப் படகு மீன்பிடி துறைமுகத்திலிருந்து சதீஷ்குமார் என்பவரது படகில் விக்னேஷ், அல்போன்ஸ், ஜூடு, சுதர்சன், ஜார்ஜ் ஆகிய 6 மீனவர்கள் கடந்த 21ம் தேதி ஆழ்கடலுக்குள் மீன் பிடிக்க சென்றனர். இவர்கள் ராமேசுவரம் பாம்பன் கடல் பகுதியில் இருந்து 30 கடல் மைல் தொலைவில் கடலில் மீன்பிடித்து கொண்டு இருந்துள்ளனர்.

கடந்த 26ம் தேதி கரை திரும்ப வேண்டிய இவர்கள் கரை திரும்பவில்லை. இது குறித்து தூத்துக்குடி திரேஸ்புரம் நாட்டுப் படகு மீன்பிடி சங்கம் சார்பில் தூத்துக்குடி மீன்வளத்துறை, மாவட்ட நிர்வாகம், கடலோர பாதுகாப்பு குழும காவல்துறை, கடலோர பாதுகாப்புப் படை ஆகியோருக்கு புகார் அளித்தனர். 

இந்நிலையில் சுமார் 45 கடல் மைல் தொலைவில் படகில் இன்ஜின் பழுதாகி நிற்பதாக மீனவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். இதையடுத்து இன்ஸ்பெக்டர் பேச்சிமுத்து கடலோர காவல்படையினருக்கு இது குறித்து தகவல் தெரிவித்துள்ளார். இதனிடையே மீனவர்களை பத்திரமாக மீட்டு கரைக்கு அழைத்து வருவதற்காக 3 படகுகளில் மீனவர்கள் கடலுக்குச் சென்றுள்ளனர். 

கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!