undefined

சிகரெட் பிடித்த சீதை... நாடகத்தில் அடிதடி, கலாட்டா... !

 

மகாராஷ்டிரா மாநிலம் புனே நகரில் உள்ள  புனே பல்கலைக்கழகத்தில் ராமலீலா நாடகம் நடத்தப்பட்டது. இந்த நாடகத்தில்   மத உணர்வுகளை புண்படுத்தும்  வகையில்   சில விஷயங்களும், எதிர்ப்புகுரிய வசனங்களும், காட்சிகளும் இடம் பெற்றன.  இதனை  ஆர்.எஸ்.எஸ். அமைப்புடன் தொடர்புடைய அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத்  மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதனால் அவர்களுக்கும், புனே பல்கலைக்கழகத்தின் லலித் கலா கேந்திரா மாணவர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.இது குறித்து   ஏபிவிபி  செயல்பாட்டாளரான ஹர்ஷவர்தன் ஹர்புடே அளித்த புகாரின் பேரில் வழக்கு   பதிவு செய்யப்பட்டுள்ளது.  

இந்த புகாரில்   ராமலீலையில் சீதை வேடமேற்று நடித்த ஆண் கலைஞர் ஒருவர் சிகரெட் பிடித்துக் கொண்டிருந்தார் இந்த காட்சிகளும், நாடகத்தில்   ஆபாச வார்த்தைகளை பயன்படுத்தியும் இருக்கிறார்.இதற்கு ஏ.பி.வி.பி. உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்து, நாடகம் நிறுத்தப்பட வேண்டும் என கூறி கோஷம் எழுப்பினர்.   இதனால், கலைஞர்களுக்கும் அவர்களுக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. அத்துடன் உறுப்பினர்களை தாக்கத் தொடங்கினர்.  

தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?

தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்....!

தை வெள்ளிக்கிழமை... மறந்தும் இதை மட்டும் செய்துடாதீங்க!

தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க