undefined

9 சவரன் நகைக்காக சகோதரி கொடூர கொலை.. முடிவுக்கு வந்த விசாரணை.. நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

 

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே உள்ள சுட்ட குண்டா பகுதியைச் சேர்ந்தவர் ராஜாமணி மகள் ரேவதி. 2019 ஆம் ஆண்டு, அவரது  சித்தப்பா மகனான செல்வராஜ் மற்றும் அவரது  கள்ளக்காதலி சித்ரா, சுத்த குண்டா காப்புக்காடு பகுதிக்கு ரேவதியை விறகு வெட்டுவதற்காக அழைத்துச் சென்றனர். பின்னர் இருவரும் சேர்ந்து ரேவதியை துப்பட்டாவால் கழுத்தை நெரித்து கொன்று 9 சவரன் தங்க நகையை திருடிச் சென்றுள்ளனர்.

முதலில் தற்கொலை என்று தோன்றிய இந்த சம்பவம் பின்னர் கொலை வழக்காக பதிவு செய்து உமராபாத் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். தற்போது இது தொடர்பான வழக்கு திருப்பத்தூர் மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்நிலையில், குற்றம் சாட்டப்பட்ட சித்ரா, செல்வராஜ் ஆகிய இருவருக்கும் ஆயுள் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து மாவட்ட நீதிபதி மீனாகுமாரி தீர்ப்பளித்தார். 

மேலும், அபராதம் கட்டத் தவறினால் மேலும் ஓராண்டு கடுங்காவல் சிறைத் தண்டனையும் நகையை திருடியதற்காக, அவருக்கு மூன்றாண்டு கடுங்காவல் சிறை தண்டனையும், ரூ. 5,000 மற்றும் அபராதம் கட்டத் தவறினால் 6 மாதம் சிறை தண்டனையும் வழங்கி தீர்ப்பளித்தார். மேலும் இலவச சட்ட உதவி மையத்திற்கு  சாட்சியம் அளித்த மீனா, ராஜேஷ், வெங்கடேசன் ஆகியோருக்கு தலா 1 லட்சம் ரூபாய் வழங்கவும் உத்தரவிட்டார்.  இந்த வழக்கில் அரசு தரப்பில் சரவணன் ஆஜரானார்.

கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்..!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!