undefined

நோய்வாய்ப்பட்டு உயிரிழந்த காதலி.. விரக்தியில் இளைஞர் எடுத்த விபரீத முடிவு!

 

விழுப்புரம் மாவட்டம் மயிலம் அருகே உள்ள பெரியாண்டப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் தட்சிணாமூர்த்தி மகன் சஞ்சீவி (வயது 23). இவர் திண்டிவனத்தில் உள்ள தனியார் வங்கியில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் அவர் காதலித்து வந்த பெண் ஒருவர் நோய்வாய்ப்பட்டு உயிரிழந்தார். காதலி இறந்த செய்தி தெரிந்ததில் இருந்து சஞ்சீவி மிகுந்த வேதனையில் இருந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மனமுடைந்த சஞ்சீவி வீட்டில் உள்ள மின்விசிறியில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். விவசாய வேலை முடிந்து பெற்றோர் வீட்டிற்கு வந்த சஞ்சீவி தூக்குப்போட்டு இறந்து கிடந்ததை பார்த்த பெற்றோர் கதறி அழுதனர். அப்போது அருகில் இருந்தவர்கள் மயிலம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

தகவலின் பேரில் மயிலம் போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று சடலத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை