பசும்பொன் தேவர் குருபூஜை விழாவில் மின்சாரம் தாக்கி எஸ்.ஐ. மரணம்... டிடிவி தினகரன் இரங்கல்!
ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்தில் நேற்று பசும்பொன் உ.முத்துராமலிங்கத் தேவர் குருபூஜையும், தேவர் ஜெயந்தி விழாவும் நடைபெற்றது.
இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் செய்தி பகிர்ந்துள்ள டிடிவி தினகரன் அதில், “பசும்பொன் உ.முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் குருபூஜை மற்றும் ஜெயந்தி விழா நிகழ்வில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பரமக்குடி காவல் உதவி ஆய்வாளர் திரு.சரவணன் அவர்கள், கொடிக்கம்பத்தில் ஏற்பட்ட மின்விபத்தில் உயிரிழந்ததாக வரும் செய்தி மிகுந்த வருத்தத்தையும் வேதனையையும் அளிக்கிறது. காவல் உதவி ஆய்வாளர் திரு.சரவணன் அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதோடு, அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம்வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்..
அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!
ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை
ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க
இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!