undefined

அதிர்ச்சி... பாதுகாப்பு பணியில் இருந்த பெண் காவலர் கோவில் உண்டியல் பணத்தைத் திருடிய கொடுமை!

 

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் கோயில் உண்டியல் பணத்தைத் திருடியதாக கைது செய்யப்பட்ட தூத்துக்குடி தென்பாகம் பெண் காவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருள்மிகு சங்கரநாராயண சுவாமி கோயிலில் உண்டியல் காணிக்கை பணம் எண்ணும் பணி கடந்த நவம்பர் மாதம் 26ம் தேதி நடைபெற்றது. அப்போது, தூத்துக்குடி தென்பாகம் காவலர் மகேஸ்வரி (42) உள்ளிட்ட 4 பெண்கள் பணத்தைத் திருடியது தெரிய வந்தது. இது குறித்த புகாரின் பேரில் சங்கரன்கோவில் போலீசார் வழக்குப் பதிந்து 4 பேரையும் கைது செய்தனர்.

இது குறித்து தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வி.ஆர். ஸ்ரீனிவாசன் விசாரணை நடத்தி தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜானிடம் அறிக்கையை சமர்ப்பித்தார். அதன்பேரில், அவர் காவலர் மகேஸ்வரியை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.

கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!