அதிர்ச்சி வீடியோ... கைக்குழந்தையுடன் காரில் இருந்த தாயை ஆவேசமாக தாக்கிய பெண்!
சமூக வலைதளங்களில் தினமும் ஆயிரக்கணக்கான வீடியோக்கள் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தற்போது வைரலாகி வரும் வீடியோ பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது ஒரு காரில் 8 மாத கை குழந்தையுடன் ஒரு தாய் இருந்து வருகிறார். அப்போது மற்றொரு காரில் இருந்து இறங்கி ஒரு பெண் வேகமாக ஓடி வர அவருடன் சேர்ந்து மற்றொரு பெண்ணும் ஓடி வருகிறார். அந்தப் பெண் திடீரென அந்த காரின் மீது ஏறி குதிக்க கண்ணாடிகள் நொறுங்கி விடுகின்றன. இதனைத் தொடர்ந்து அந்த வாகனத்தை அந்த பெண்கள் தாக்கிய நிலையில் அந்த பெண்களின் கார் நம்பரை அந்த வாகனத்தில் இருந்த தாய் பதிவு செய்ய முயற்சி செய்துள்ளார்.
இதனால் கோபம் அடைந்த அந்த பெண்கள் மீண்டும் ஆக்ரோஷமாக தாக்குகின்றனர். இதனை பாதிக்கப்பட்ட தாய் வீடியோ எடுத்த நிலையில் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதன் பிறகு இச்சம்பவம் நியூசிலாந்தில் நடந்தது என்பதால் வழக்கு விசாரணைக்கு ஒரு வருடம் ஆனது எனவும் பதிவிட்டுள்ளார். இச்சம்பவம் நடந்து ஒரு வருடங்கள் ஆகி இருந்தாலும் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி சாலை பாதுகாப்பு குறித்த கேள்விகளையும் பொதுவெளியில் நடக்கும் வன்முறைகளை தடுப்பதன் அவசியத்தையும் வலியுறுத்துகிறது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!