undefined

ஷாக் வீடியோ... 1000 வருஷ பழமையான கோவிலில்  திடீரென உச்சிக்கு ஏறிய சுற்றுலா பயணி! 

 

மெக்ஸிகோவில் அமைந்துள்ளது  பாரம்பரிய மாயன் கோவிலான குகுல்கான் கோவில் . இந்த கோவிலை சுற்றிப்பார்க்க தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்வது வழக்கம்.  ஜெர்மனியைச் சேர்ந்த சுற்றுலாப் பயணி ஒருவர் ஏறியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவம் மார்ச் 20ம் தேதி நடைபெற, அந்த சுற்றுலாப்பயணி மத்திய மெக்ஸிகோவில் உள்ள சிச்சன் இட்ஸா என்ற இடத்தில் உள்ள கோவிலின் உச்சிக்கு ஏறினார். 

 

அப்போது, அங்கு இருந்த உள்ளூர் மக்கள் “அங்கே ஏறக்கூடாது!” எனக் கத்திக்கொண்டே இருந்தனர். அத்துடன் பாதுகாப்பு அலுவலர் ஒருவர் அவரை பின் தொடர்ந்தனர்.  மெக்ஸிகோ தேசிய மீட்பு  படை வந்து அந்த சுற்றுலாப் பயணியை கைது செய்துள்ளது.

 

 

இந்த வீடியோ வைரலாகி சமூக வலைதளங்களில்  வைரலாகி வருகிறது. இந்நிலையில் அவர் கைது செய்யப்பட்டபோது அங்கிருந்தவர்கள் அவரை தாக்கியதோடு முட்டாள்” எனவும் திட்டியுள்ளனர்.  

 

 

மெக்ஸிகோவில் உள்ள சிச்சன் இட்ஸா கோவில் 1000 ஆண்டுகளுக்கும் மேலான வரலாற்றைக் கொண்டது. ஒவ்வொரு வருடமும்  சமநிலை நாளில் இங்கு சிறப்பு ஒளி-நிழல் நிகழ்வு நடைபெறும், இதனை காண பெரிய அளவில் சுற்றுலாப் பயணிகள் வருகை தருவார்கள். தற்போதைய விதிகளின்படி, அந்த கோவிலின் உச்சிக்கு ஏறுவது இங்கே தடை செய்யப்பட்டுள்ளது.

 

 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

 உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?