அதிர்ச்சி வீடியோ... நடந்து சென்ற பள்ளி மாணவன் மாரடைப்பால் மரணம்!

 

சமீபமாக அதிலும் குறிப்பாக கொரோனா காலத்திற்கு பிந்தையா வாழ்க்கை முறை அதிர்ச்சியளிப்பதாகவே கடந்து செல்கிறது. மாரடைப்பு மரணங்கள் அதிகரித்து வருகிறது. அடுத்த தலைமுறை அதிகளவிலான மன அழுத்தத்தில் இருப்பதாக ஆய்வு முடிவுகள் கூறுகின்றன. அதிலும் குறிப்பாக இளம் வயதில் மாரடைப்பு மரணங்கள் அதிகரிக்கின்றன. இந்நிலையில், பள்ளி வகுப்பறையில் இருந்து சந்தோஷமாக நடந்து வெளியே வந்த மாணவன், மாரடைப்பு காரணமாக சுருண்டு விழும் சிசிடிவி வீடியோ வெளியாகி அதிர்ச்சியளிக்கிறது.

ராஜஸ்தான் மாநிலம் தௌசா பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுவன், பள்ளிக் கட்டிடத்திற்குள் ஒரு வினாடிக்குள் உயிரிழந்துள்ளான். இந்த அதிர்ச்சி வீடியோவில், சில சிறுவர்கள் ஒரு அறையிலிருந்து வெளியே வருகிறார்கள். அவர்களில் ஒரு சிறுவன் நிலைகுலைந்து உடனடியாக இறந்து விடுகிறான். யாரோ ஓடிவந்து அவரைத் தூக்குவதுடன் வீடியோ முடிகிறது. இதில் அச்சிறுவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக கூறப்படுகிறது. சிசிடிவியில் பதிவான இந்த வீடியோ எக்ஸ் தளத்தில் பகிரப்பட்டது.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!