பெண் செய்தியாளரை முட்டி தூக்கி எறிந்த காளை... அதிர்ச்சி வீடியோ!
பாகிஸ்தானில் பெண் செய்தியாளர் ஒருவர் மாட்டுச் சந்தையில் வியாபாரிகளிடம் நேர்காணல் செய்து கொண்டிருந்தார். இந்நிகழ்ச்சியில் மாடுகளின் விலை, அதன் வியாபாரம் குறித்து கலந்துரையாடல் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அந்த சமயத்தில் திடீரென எங்கிருந்தோ வந்த ஒரு காளை மாடு அந்த பெண் செய்தியாளரை முட்டி தூக்கி எறிந்துவிட்டது. இது குறித்த வீடியோவையும் ஒளிப்பதிவாளர் கேமராவில் பதிவு செய்தார்.
அந்த பெண்ணும் அலறி அடித்து கீழே விழுவது போல் பதிவாகியிருந்தது. இதன் பிறகு உடனடியாக அங்கிருந்த வியாபாரிகள் அந்த காளை மாடுகளை அங்கிருந்து இழுத்து செல்கின்றனர். இந்த வீடியோவானது 3 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளது. இதற்கு நெட்டிசன்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். ஒரு விபரீதம் நிகழும் போது அதனை படம் பிடிப்பதை தவிர்த்து உதவி செய்ய முன் வர வேண்டும் என ஆவேசமாக கூறியுள்ளனர்.
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!