undefined

தலைமை ஆசிரியரை தாக்கிய அதிர்ச்சி சம்பவம்.. உடற்கல்வி ஆசிரியர் அதிரடியாக பணியிடை நீக்கம்!

 

கூடலூரில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியரை தாக்கியதாக உடற்கல்வி ஆசிரியர் பணியில் இருந்து தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே ஸ்ரீ மதுரை அரசு மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. கடந்த 8ம் தேதி, பள்ளியின் செயல் தலைமை ஆசிரியை சசிகலாவை, அதே பள்ளியில் பணிபுரியும் உடற்கல்வி ஆசிரியை அசீமா என்பவர் தாக்கி, தகாத வார்த்தைகளால் திட்டியதாக கூறப்படுகிறது.

பாதிக்கப்பட்ட தலைமை ஆசிரியை சசிகலா மற்றும் பள்ளி நிர்வாகக் குழு சார்பில் உயர் அதிகாரிகளிடம் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து, இந்த சம்பவம் குறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் நந்தகுமார் உத்தரவின் பேரில் பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது.

விசாரணையின் அடிப்படையில் உடற்கல்வி ஆசிரியர் அசீமாவை தற்காலிக பணிநீக்கம் செய்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் நந்தகுமார் உத்தரவிட்டுள்ளார்.

கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!