அதிர்ந்த அதிகாரிகள்... நடுக்கடலில் 500 கிலோ போதைப்பொருள் பறிமுதல்!
தமிழகத்தில் சமீப காலங்களாக போதைப் பொருட்களின் புழக்கம், கடத்தல் அதிகரித்து வருகிறது. சர்வதேச போதைப் பொருட்கள் கடத்தல் கும்பல்களின் நடமாட்டமும் தமிழகத்தில் இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. பெரும்பாலான கடத்தல், போதைப் பொருட்கள் விற்பனை சம்பவங்களில் கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் கைது செய்யப்படுவது கூடுதல் அதிர்ச்சி.
இந்நிலையில் அரபிக்கடலில் சென்றுக் கொண்டிருந்த இரண்டு படகுகளில் இருந்து சுமார் 500 கிலோ போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது.
அரபிக்கடலில் போதைப்பொருட்கள் கடத்திச் செல்லப்பட இருப்பதாக வந்த தகவலையடுத்து இன்று இந்திய கடற்படை மற்றும் இலங்கை கடற்படை அதிகாரிகள் இணைந்து அங்கு தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
அப்போது, அரபிக்கடலில் இரண்டு படகுகளில் இருந்து சுமார் 500 கிலோ போதைப்பொருள் (கிரிஸ்டல் மெத்) கடத்திச் செல்லப்பட்டது கண்டறியப்பட்டு அவை கைப்பற்றப்பட்டது.
இரண்டு படகுகளில் இருந்த நபர்களை சுற்றி வளைத்த கடற்படை அதிகாரிகள் அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
படகுகளில் இருந்து அதிகாரிகள் கைப்பற்றிய போதைப் பொருட்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக இலங்கை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!
ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!
கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!