பேரதிர்ச்சி.. உத்தரகாண்ட் முன்னாள் முதல்வர் சென்ற கார் விபத்துக்குள்ளானது..!!
உத்தரகாண்ட் மாநில முன்னாள் முதல்வர் ஹரிஷ் ராவத், அம்மாநிலத்தின் காஷிபூர் நகருக்கு சென்று கொண்டிருந்தபோது அவர் பயணித்த கார் விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில், அவருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டுள்ளன. இந்த தகவலை அவரே உறுதி படுத்தியுள்ளார்.
ஆனால், தன்னை பரிசோதித்த மருத்துவர்கள் அனைத்தும் சரியாக இருப்பதாக கூறி தன்னை டிஸ்சார்ஜ் செய்து விட்டதாகவும் ஹரீஷ் ராவத் கூறியுள்ளார். "இந்த சம்பவம் குறித்து சில நண்பர்கள் சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ளனர், இது சிலரிடையே கவலையை ஏற்படுத்தக்கூடும். கவலைப்பட ஒன்றுமில்லை. நான் முற்றிலும் நலமாக இருக்கிறேன், எனது சக ஊழியர்களும் நலமாக இருக்கிறார்கள்." என ஹரீஷ் ராவத் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
ஐந்து முறை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்துள்ள ஹரீஷ் ராவத், கடந்த 2014ஆம் ஆண்டு முதல் 2017ஆம் ஆண்டு வரை உத்தரகாண்ட் முதல்வராக பதவி வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.