ஷாக்.. சண்டையை தடுக்க சென்ற போது விபரீதம்.. ஆஸ்திரேலியாவில் பலியான இந்திய மாணவர்!

 

ஆஸ்திரேலியாவில் உள்ள மெல்போர்னில் எம்.டெக் படித்து வந்தார் இந்தியாவைச் சேர்ந்த  நவ்ஜீத் சந்து (வயது 22). வாடகைத் தகராறில் ஈடுபட்ட இந்திய மாணவர்களைத் தடுக்க முயன்றபோது நடந்த தாக்குதலில் சந்து என்பவர் உயிரிழந்தார். இதுகுறித்து சந்துவின் மாமா கூறும்போது, சந்துவிடம் கார் இருந்தது. இதனால் சந்துவின் நண்பர் வீட்டில் உள்ள பொருட்களை எடுக்க காரில் சென்றுள்ளார். நண்பர் வீட்டுக்குள் சென்றபோது வெளியே சிலர் சத்தம் போட்டு சண்டை போட்டுக் கொண்டிருந்தனர். இந்த சத்தம் கேட்டு சந்து  சென்றான்.

அப்போது சக இந்திய மாணவர்கள் வீட்டு வாடகை கொடுப்பது தொடர்பாக தகராறில் ஈடுபட்டுள்ளனர். இதனால் தகராறில் ஈடுபட்டவர்களை சந்து தடுத்து நிறுத்த முயன்றார். அப்போது, ஆத்திரமடைந்த மாணவர்கள் சந்துவின் மார்பில் சரமாரியாக குத்தியுள்ளனர். அதில் அவர் இறந்துவிட்டதாக வருத்தம் தெரிவித்தார். கடந்த ஜூலை மாதம் சந்து தனது குடும்பத்தினரை சந்திக்க சென்றபோது இந்த சோகம் நடந்தது. சந்து ஒன்றரை வருட வேலை விசாவில் ஆஸ்திரேலியா சென்றுள்ளார்.

சந்துவின் தந்தை ஒன்றரை ஏக்கர் நிலத்தை விற்று அதில் கிடைக்கும் பணத்தை சந்துவின் கல்விக்காக செலவிட்டுள்ளதாக அவரது மாமா தெரிவித்தார். இந்த வழக்கில் அபிஜீத் (26), ராபின் கார்டன் (27) ஆகியோரை விக்டோரியா போலீசார் தேடி வருகின்றனர். இருவரும் சகோதரர்கள். காரை திருடி அதில் ஏறி தப்பிச் சென்றனர். அவர்களை தேடும் பணி நடந்து வருகிறது. தாக்குதல் நடத்தியவர்கள் ஹரியானா மாநிலம் கர்னால் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். இச்சம்பவத்தில் மற்றுமொரு மாணவர் படுகாயமடைந்து சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!