undefined

அதிர்ச்சி... அடுக்குமாடி குடியிருப்பின் லிப்டில் சிக்கி காவலாளி மரணம்!

 

சென்னை தாம்பரம் சேலையூர் பகுதியில், ராஜகீழ்ப்பாக்கத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக லிப்டில் சிக்கி காவலாளி உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

தாம்பரத்தை அடுத்துள்ள சேலையூர் ராஜாஜி நகர் 4வது தெருவைச் சேர்ந்தவர் நட்ராஜ் (56). இவர் ராஜகீழ்பாக்கம் மாடம்பாக்கம் பிரதான சாலையில் உள்ள ஜெயின் சுதர்சன் எனும் அபார்ட்மெண்டில் காவலாளியாக வேலைப் பார்த்து வந்தார். இந்த குடியிருப்பில் 1 முதல் 14 பிளாக்குகள், 4 அடுக்குமாடி குடியிருப்புகளாக மொத்தம் 420 வீடுகள் உள்ளன.

இந்நிலையில் நேற்று மாலை இந்த குடியிருப்பின் நாலாவது மாடியில் உள்ள மொட்டை மாடியில் கதவை மூடிவிட்டு 4வது மாடியில் கீழே இறங்குவதற்காக லிப்டை திறந்த போது லிஃப்ட் மேலே இல்லாமல் காலியாக இருந்துள்ளது. வழக்கமாக இது போன்ற சமயங்களில் லிப்ட் இல்லை என்றால் லிப்டின் கதவு திறக்காது. கதவு திறந்ததும் லிப்ட் வந்திருப்பதாக நினைத்து உள்ளே கால் வைத்த காவலாளி, கால் தவறி லிப்டிற்கான இடைவெளியில் உள்ளே விழுந்துள்ளார். இதில் 2 வது மாடியில் நின்றிருந்த லிப்டினுள்ளே கால் உள்ளே மாட்டி வெளியே விழுந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து தகவல் அறிந்த சேலையூர் போலீசார் மற்றும் மேடவாக்கம் தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் லிப்டில் சிக்கியிருந்த நட்ராஜின் உடலை மீட்டு தாம்பரம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். லிப்டினுள் காவலாளி நட்ராஜ் உயிரிழந்த சம்பவம் அந்த குடியிருப்புவாசிகளிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இது குறித்த போலீசாரின் விசாரணையில், தொழில்நுட்ப கோளாறு காரணமாக லிப்டின் சென்சார் பழுது அடைந்துள்ளதாகவும் இதனால் கதவு திறந்ததால் லிப்டில் சிக்கி காவலாளி பரிதாபமாக உயிரிழந்ததும் தெரிய வந்துள்ளது. லிப்டை சரிவர  பராமரிக்காததால் இந்த உயிரிழப்பு சம்பவம் நடந்துள்ளதாக தெரிய வந்துள்ளது. 

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை

ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!