undefined

அதிர்ச்சி வீடியோ.. மைசூர் அரண்மனையில் பயங்கரமாக தாக்கிக்கொண்ட தசரா யானைகள்!

 

அமைதிக்கு பெயர் பெற்ற தசரா யானைகள் மைசூர் வளாகத்தில் அட்டகாசம் செய்து அப்பகுதியில் அசாதாரண சூழலை உருவாக்கியது.  ​​மைசூர் அரண்மனை வளாகத்தில் வெள்ளிக்கிழமை இரவு உணவின் போது தனஞ்சயா மற்றும் காஞ்சன் ஆகிய இரண்டு தசரா யானைகள் சிறிய அளவில் மோதலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தனஞ்சயா  யானை காஞ்சனை தாக்கி விரட்ட முயன்றது. அப்போது காஞ்சன் யானை பாகன் இல்லாமல் முகாமில் இருந்து வெளியேறி மைசூர் அரண்மனை ஜெயமார்த்தாண்ட வாயில் கண்காட்சி சாலை அருகே இரும்பு தடுப்புகளை தள்ளிக்கொண்டு தப்பியது. இதைத் தொடர்ந்து மக்கள் பயந்து ஓடினார்கள்.

மைசூரில் நடக்கும் தசரா விழாவை நினைக்கும் போது பலருக்கு யானை சவாரி நினைவுக்கு வரும். ஜம்பு சவாரி ஊர்வலம் அங்கு மிகவும் பிரபலமாக கருதப்படுகிறது. அங்கு ஊர்வலமாக செல்லும் 2 யானைகள் அமைதியாகவும் சாந்தமாகவும் செல்லும். இந்நிலையில், மைசூர் வளாகத்தில் மென்மைக்கு பெயர் போன 2 யானைகள் திடீரென மோதலில் ஈடுபட்டு ஓடியதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மேலும், இந்த யானைகள் சமீபத்தில் கொண்டுவரப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசி மாதத்தில் ஏன் அசைவம் சாப்பிடக்கூடாது ... விஞ்ஞான விளக்கம்!