undefined

அதிர்ச்சி... வருண்குமார் ஐபிஎஸ் குறித்து பதிவிட்ட காலேஜ் டாப்பர்... பெருந்தன்மையாக மன்னித்து, அறிவுரை கூறிய அனுப்பிய வருண்குமார்!

 

திருச்சி எஸ்பி வருண்குமார் குறித்து அவதூறு கருத்துகளைப் பரப்பியதாக நாம் தமிழர் கட்சியினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், ட்விட்டரில் பல பேக் ஐடிக்கள் அவரையும் அவரது குடும்பத்தினரையும் ஆபாசமாக சித்தரித்து வருகின்றனர்.

இந்நிலையில் தொடர்ந்து ஆபாச சித்தரிப்பில் ஈடுபட்ட இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், கல்லூரி மாணவர் ஒருவர் இப்படி ஆபாசமாக பதிவிட்டது கண்டுபிடிக்கப்பட்டது. 

திருச்சி மாவட்ட எஸ்பி வருண்குமார், புதுக்கோட்டை எஸ்பியும் வருண்குமாரின் மனைவியுமான வந்திதா பாண்டே ஆகியோரை ட்விட்டர் கணக்கில் இருந்து ஆபாசமாகவும் தரக்குறைவாகவும் விமர்சித்து சமூக வலைதளங்களில் பதிவுகள் வெளியிடப்பட்டன.

இது குறித்த விசாரணையில், இப்படி பதிவிட்டவர்களில் இருவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், மற்றொருவர் கல்லூரி மாணவர் என்பதும், பொலிட்டிக்கல் சயின்ஸ் படித்து வரும் அந்த மாணவர் கல்லூரியில் டாப்பர் என்பதும் விசாரணையில் தெரிய வந்தது.

இதையடுத்து அந்த கல்லூரி மாணவரை நேரில் அழைத்து, அவருக்கு உரிய கவுன்சிலிங் கொடுத்து அவரின் எதிர்காலம் கருதி விடுவிப்பதாகவும், இனி இது போன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது என்று அறிவுரை கூறி, அவரது தாயாருக்கும் அறிவுரை கூறி, அவரை பெருந்தன்மையாக அனுப்பி வைத்திருக்கிறார் வருண்குமார். சமூக வலைத்தளங்களில் வருண்குமாரின் இந்த நடவடிக்கைக்கு பலரும் பாராட்டுக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை