செப்டிக் டேங்க் குழி தோண்டியதில் விஷவாயு தாக்கி தூய்மைப் பணியாளர்கள் 2 பேர் உயிரிழப்பு!
சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் கழிவுநீர் தொட்டிக்கு குழி தோண்டியபோது விஷவாயு தாக்கி 2 பேர் உயிரிழந்தனர். அவர்களை காப்பாற்றிய தீயணைப்பு வீரர் மயங்கி விழுந்தார். இளையான்குடி பிஸ்மில்லா நகரை சேர்ந்தவர் சிக்கந்தர் என்பவர் அப்பகுதியில் வீடு கட்டி வருகிறார். கடந்த 3 நாட்களாக அவரது வீட்டில் செப்டிக் டேங்க் குழி தோண்டப்படுகிறது. இப்பணியில் நேற்று சீதுராணியைச் சேர்ந்த ராமையா (50), திருவுடையார்புரம் பாஸ்கரன் (50) ஆகியோர் துப்புரவு பணியாளர்கள் இருவரும் ஈடுபட்டிருந்தனர். 25 அடிக்கு மேல் பள்ளம் தோண்டிக் கொண்டிருந்த போது திடீரென இருவரும் விஷவாயு தாக்கி மயங்கி குழிக்குள் விழுந்தனர்.
இது குறித்து தகவல் அறிந்து மீட்பு பணியில் ஈடுபட்டிருந்த தீயணைப்பு வீரர்களில் ஒரு தீயணைப்பு வீரர் குழியில் இறங்கிய போது, அவரும் மயங்கி விழுந்தார். உடனடியாக அங்கிருந்த மற்ற வீரர்கள், அவரை மேலே தூக்கி முதலுதவி செய்து காப்பாற்றினார்கள். அதன் பின்னர் ஆக்சிஜன் சிலிண்டர் உதவியுடன் குழியில் இறங்கி, குழிக்குள் மயங்கி கிடந்த துப்புரவு பணியாளர்கள் இருவரையும் மீட்டு இளையான்குடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனை கொண்டு செல்லும் வழியிலேயே இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இது குறித்து இளையான்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில்,"பிஸ்மில்லா நகர் அருகே சீதுராணி கண்மாய் பாசன கால்வாய் உள்ளது. இளையான்குடி நகர் பகுதியில் இருந்து கழிவுநீர் வெளியேறுகிறது.கழிவுநீர் ஆங்காங்கே தேங்கி நிலத்தடிக்கு செல்கிறது.அதனால் தான் குழி தோண்டிய போது கழிவுநீரால் உற்பத்தியாகும் விஷவாயு காரணமாக இருவர் உயிரிழந்திருக்கலாம் என்று தெரிவித்தனர்.
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
புரட்டாசி மாதத்தில் ஏன் அசைவம் சாப்பிடக்கூடாது ... விஞ்ஞான விளக்கம்!