undefined

அதிர்ச்சி.. காட்டு பன்றிகள் தாக்கி மூன்று விவசாயிகள் படுகாயம்!

 

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம், புதூர், எட்டயபுரம், கயத்தாறு, கோவில்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் காட்டுப்பன்றிகள் அட்டகாசம் செய்து வருகின்றன. பருவமழை பயிர்களை சேதப்படுத்தும் பன்றிகள், விவசாயிகளையும் தாக்கி காயப்படுத்தி வருகின்றன. இதனால் விவசாயிகள் பெரும் இன்னல்களை சந்தித்து வருகின்றனர். புதூர் அருகே கம்பத்துப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி அய்யாறப்பன், ஒரு மாதத்துக்கு முன் பன்றி கடித்ததில் பலத்த காயமடைந்து மதுரை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்றார்.

இந்நிலையில் எட்டயபுரம் அருகே பன்றி தாக்கியதில் 3 விவசாயிகள் பலத்த காயம் அடைந்துள்ளனர். எட்டயபுரம் தாலுக்கா அயங்கரிசல்குளம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ஏ.மோகன்ராஜ் (62) என்பவர் இன்று காலை கிராமத்திற்கு வடக்கே தனது நிலத்தில் பயிரிடப்பட்டிருந்த மக்காச்சோளப் பயிரைப் பார்க்கச் சென்றிருந்தார்.

அப்போது மக்காச்சோள பயிரில் மறைந்திருந்த பன்றி பயிர்களை சேதப்படுத்தி வந்தது. இதை பார்த்த மோகன்ராஜ், பலத்த சத்தத்துடன் பன்றியை விரட்டினார். அப்போது மோகன்ராஜை பன்றி தாக்கியது. இதில், கையில் காயம் அடைந்த மோகன்ராஜ், பக்கத்து விவசாயிகளை அழைத்தார். இதையடுத்து சண்முகராஜ் (54), ராமசாமி (62) ஆகியோர் அங்கு விரைந்தனர்.

மோகன்ராஜ் அவர்களுடன் இணைந்து பன்றியை விரட்டும் பணியில் ஈடுபட்டார். இந்த நேரத்தில், பன்றி அவர்கள் மூவரையும் கடுமையாக தாக்கியது. இதுகுறித்து தகவல் அறிந்த அயங்கரிசல்குளம் கிராம மக்கள் பலத்த காயமடைந்தவர்களை மீட்டு அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்குள்ள அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் விவசாயிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்..!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!