undefined

 அதிர்ச்சி... வீடுபுகுந்து இளம்பெண் குத்திக்கொலை...  வாலிபர் வெறிச்செயல்!

 
 

தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே வீடுபுகுந்து இளம்பெண்ணை குத்திக் கொலை செய்த வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர். 

தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே உள்ள அகரம் வடக்குத் தெருவை சேர்ந்தவர் சந்திரலிங்கம். இவரது மனைவி தேவிகலா (36). இவர்களுக்கு திருமணமாகி 2 மகன்கள் உள்ளனர். இந்நிலையில் இன்று காலை 10.30 மணியளவில் தேவிகலா மட்டும் வீட்டில் தனியே இருந்துள்ளார்.  அப்போது அங்கு வந்த வாலிபர் ஒருவர் வீட்டிற்குள் புகுந்து தேவிகலாவை சரமாரியாக கத்தியால் குத்தி கொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடினார். 

தேவிகலாவின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடிச் சென்றுப் பார்த்தனர். அதற்குள் வாலிபர் தனது இருசக்கர வாகனத்தை போட்டு விட்டு அங்கிருந்து தப்பி ஓடினார். இதுகுறித்து தகவல் அறிந்தவுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற ஏரல் போலீசார், தேவிகலாவின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், தேவிகலாவை கொலை செய்தது அதே பகுதியை சேர்ந்த லிங்கராஜ் (26) என்பது தெரிய வந்துள்ளது. தேவிகலாவுக்கும் அவருக்கும் இடையே பழக்கம் இருந்ததாகவும், இதனால் அவரது கணவர் சந்திரலிங்கம் தேவிகலாவை கண்டித்ததாகவும் கூறப்படுகிறது. 

கள்ளக்காதல் காரணமாக இந்த கொலை நடந்ததா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தப்பி ஓடிய லிங்கராஜை போலீசார் தேடி வருகின்றனர். சம்பவ இடத்தில் டி.எஸ்.பி. ராமகிருஷ்ணன் சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினார். இந்த கொலை சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!