undefined

அதிர்ச்சி.. குடிபோதையில் மாணவியிடம் எல்லைமீறிய தமிழ் ஆசிரியர்!

 

சேலம் மாவட்டம், எடப்பாடி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட அரசு மேல்நிலைப்பள்ளியில், 200க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். இப்பள்ளியில் பிரிகதீஸ்வரன் என்ற தற்காலிக தமிழ் ஆசிரியர் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் நேற்று 11ம் வகுப்பு மாணவர்களுக்கான சிறப்பு வகுப்பு பள்ளியில் நடந்தது.

மாணவர்களுக்கு பாடம் சொல்லிக் கொண்டிருந்த தமிழாசிரியர் பிரகதீஸ்வரன், சிறப்பு வகுப்பிற்கு வந்த மாணவியிடம் குடிபோதையில் பாலியல் தொல்லையில் ஈடுபட்டு வந்த மாணவியிடம் ஆபாசமாக பேசியதாக கூறப்படுகிறது. வகுப்பு முடிந்து வீடு திரும்பிய மாணவி, தனக்கு நேர்ந்த கொடுமையை பெற்றோரிடம் கூறி அழுதார். அதிர்ச்சியடைந்த பெற்றோர், ஆசிரியர் மீது பூலாம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

குற்றம் சாட்டப்பட்ட தமிழ் ஆசிரியர் பிரகதீஸ்வரனை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். இதையடுத்து அவர் சங்ககிரி அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!