undefined

அதிர்ச்சி... அரசு பள்ளி வகுப்பறையில் மாணவன் தூக்கிட்டு தற்கொலை!

 

அதிகளவிலான மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்து  கொள்ளும் போக்கு இளைய தலைமுறையினரிடையே அதிகரித்து வருகிறது. குறிப்பாக பள்ளி, கல்லூரி மாணவர்கள் அதிகளவில் தற்கொலையில் ஈடுபடுகின்றனர். இவர்களின் மன அழுத்தத்தைக் குறைப்பதற்கான நடவடிக்கைகளில் அரசும், ஆசிரியர்களும் ஈடுபட வேண்டுமென நீண்ட நாட்களாகவே சமூக ஆர்வலர்களிடையே கருத்து நிலவி வருகிறது. இந்நிலையில், அரசு பள்ளி வகுப்பறையில் 15 வயதேயான மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அருகே உள்ள புனவாசல் கிராமத்தை சேர்ந்தவர் ஜெகநாதன். இவரது மகன் தீபக் (15), கடலாடியில் உள்ள அரசு பள்ளியில் படித்து வருகிறார். இந்நிலையில், இன்று காலை பள்ளி வகுப்பறையில் தீபக், தூக்கிட்ட நிலையில் தற்கொலை செய்து கொண்டார்.

தீபக் தூங்கில் தொங்குவதைப் பார்த்த சக மாணவர்கள் அதிர்ச்சியடைந்து, உடனடியாக இது குறித்து ஆசிரியர்களிடம் தெரிவித்தனர். பதறியடித்து ஓடி வந்த ஆசிரியர்கள், மாணவன் தீபக்கின் உடலைக் கண்டு அதிர்ந்து போயினர். உடனடியாக இதுகுறித்து கடலாடி போலீசாருக்கு தகவல் அளித்தனர். தகவலறிந்து பள்ளிக்கு விரைந்து சென்ற போலீசார் மாணவனின் சடலத்தை மீட்டு கடலாடி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அரசு பள்ளி வகுப்பறையில் மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்கொலை செய்து கொண்ட மாணவன் புனவாசல் கிராமத்தைச் சேர்ந்த ஜெகநாதன் மகன் தீபக் என விசாரணையில் தகவல் தெரியவந்துள்ளது. 

60 நாட்களுக்கு சபரிமலை போறவங்களுக்கு உணவு தங்குமிடம் எல்லாமே இலவசம்

ஐயப்ப பக்தர்கள் கார்த்திகை மாதம் சொல்ல வேண்டிய ஸ்லோகம்

சபரிமலைக்குச் செல்பவர்கள் தினமும் சொல்ல வேண்டிய ஐயப்பன் ஸ்லோகம்!

கார்த்திகை பொறந்துடுச்சு... ஐயப்ப பக்தர்களுக்கு சபரிமலை சிறப்புக்கள்!