அதிர்ச்சி... ஆபாச வீடியோக்களை காட்டி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை... அதிர வைத்த தலைமையாசிரியர்!
வேலியே பயிரை மேய்ந்த கதையாக, பள்ளி மாணவிகளுக்கு ஆபாச வீடியோக்களைக் காட்டி, பள்ளியின் தலைமையாசிரியரே பாலியல் தொல்லைத் தந்த சம்பவம் ஓட்டப்பிடாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து தகவலறிந்த போலீசார், வழக்குப்பதிவு செய்து அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர் ஜான்சனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் கோவிந்தாபுரம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி இயங்கி வருகிறது. ஐந்தாம் வகுப்பு வரை மட்டுமே உள்ள இந்த பள்ளியில் 8 மாணவ, மாணவிகள் மட்டுமே பயின்று வருகின்றனர். இப்பள்ளியில் ஜான்சன் (58) என்பவர் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகின்றார்.
இந்நிலையில் தலைமை ஆசிரியர் ஜான்சன் அங்கு பயிலும் 4-ம் வகுப்பை சேர்ந்த இரண்டு சிறுமிகளுக்கு தனது செல்போனில் ஆபாச வீடியோக்களை காட்டி பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்து பாதிக்கப்பட்ட சிறுமிகள் தங்களது பெற்றோர்களிடம் கூறியுள்ளனர். இதையடுத்து, பாதிக்கப்பட்ட சிறுமிகளின் பெற்றோர் தலைமை ஆசிரியர் ஜான்சன் மீது கடம்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
அதையடுத்து இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த கடம்பூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் தலைமை ஆசிரியர் ஜான்சன் மீதான குற்றச்சாட்டுகளில் உண்மை இருப்பது தெரியவந்தது.
அதையடுத்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து, அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பள்ளியின் தலைமை ஆசிரியர், தொடக்கப் பள்ளியில் படிக்கும் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரம் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!