அதிர்ச்சி... சபரிமலை | இயந்திர கோளாறால் தீ பற்றி எரிந்த பேருந்து: பக்தர்கள் இல்லாததால் விபத்து தவிர்ப்பு
சபரிமலை சென்ற பேருந்து தீ விபத்திற்குள்ளானது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலத்தில் அமைந்துள்ள உலகப் பிரசித்திப் பெற்ற சபரிமலை மகர விளக்கு மற்றும் மண்டல பூஜைகளுக்காக வெள்ளிக்கிழமை நடை திறக்கப்பட்டது. தினமும் லட்சக்கணக்கானபக்தர்களை ஏற்றிச் செல்வதற்காக பம்பையில் இருந்து நிலக்கல்லை நோக்கி அரசுப் பேருந்து ஞாயிற்றுக்கிழமை அதிகாலை புறப்பட்டது.
இந்த பேருந்து சாலக்காயத்துக்கும் நிலக்கல்லுக்கும் இடைப்பட்ட வனப்பகுதியில் 30வது ஹேர்பின் வளைவில் அதிகாலை 5.30 மணியளவில் வந்துகொண்டிருந்த போது திடீரென தீப்பிடித்து எரியத் தொடங்கியது. பேருந்தில் இருந்து புகை வருவதை கவனித்த ஓட்டுநர் உடனடியாக பேருந்தை நிறுத்தி விட்டார். தகவல் கிடைத்ததும் நிகழ்விடத்துக்கு பம்பை மற்றும் நிலக்கல்லில் இருந்து தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.
பேருந்து பகுதி அளவில் சேதமடைந்த போதிலும், காலியாக சென்ற பேருந்து என்பதால் யாருக்கும் காயங்கள் ஏற்படவில்லை. தீவிபத்திற்கு பிறகு தேவசம்போர்டு உறுப்பினர் அஜிகுமார் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டார். இதற்கான காரணம் குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை.
கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!
ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்..!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!
கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!