ஷாக்.. ரஷ்ய அதிபர் புதினை விமர்சித்த பிரபல ’செஃப்’ மர்மமான முறையில் உயிரிழப்பு!
உக்ரைன்-ரஷ்யா போர் தொடர்பாக புதினை விமர்சித்த 'செஃப்' அலெக்ஸி ஜிமின், செர்பியாவில் உள்ள ஒரு ஹோட்டலில் ம்ர்மமான முறையில் இறந்து கிடந்தார். அலெக்ஸி ஜிமின் 2014 இல் ரஷ்ய ஜனாதிபதி புதின் கிரிமியா தலைவர்களுடன் இணைப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதை விமர்சித்த பின்னர் ரஷ்யாவை விட்டு வெளியேறினார்.
அலெக்ஸி ஜிமின் பிரிட்டனைச் சேர்ந்தவர். அவர் ரஷ்யாவை விட்டு வெளியேறி லண்டனில் குடியேறினார். அங்கிருந்து ரஷ்ய தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்று மக்கள் மத்தியில் பிரபலமானார். அலெக்ஸி ஜிமின் 2022 இல் தொடங்கிய உக்ரைன்-ரஷ்யா போர் தொடர்பாக ரஷ்ய அதிபர் புதினை தொடர்ந்து விமர்சித்து வருகிறார்.
பின்னர் அவரது ரஷ்ய தொலைக்காட்சி நிகழ்ச்சியான 'குக்கிங் வித் அலெக்ஸி ஜிமின்' திடீரென நிறுத்தப்பட்டது. இந்நிலையில் அலெக்ஸி ஜிமின் தான் எழுதிய புத்தகத்தை விளம்பரப்படுத்த செர்பியா சென்றார். அங்குள்ள ஓட்டல் அறையில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதுகுறித்து காவல்துறையினர் தீவிரமாக விசாராணை நடத்தி வருகின்றனர்.
ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...
ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க
இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!