அதிர்ச்சி.. போலீஸ் வேணும், அரசு பேருந்தும் நேருக்கு நேர் மோதி கோர விபத்து!
விழுப்புரத்தில் அரசுப் பேருந்தும், போலீஸ் வேனும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் காவல் உதவி ஆய்வாளர் ஓட்டுநர் உள்பட 4 பேர் பலத்த காயமடைந்தனர். இந்த விபத்தால் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. சென்னையில் இருந்து ராமநாதபுரம் நோக்கி போலீசார் வேனில் விழுப்புரம் வழியாக சென்று கொண்டிருந்தனர்.
அப்போது விராட்டிக்குப்பம் சாலை அருகே போலீஸ் வேன் வந்தபோது, எதிர்திசையில் திருச்சியில் இருந்து வந்த அரசுப் பேருந்தும், போலீஸ் வேனும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காவல் உதவி ஆய்வாளர் அசோகுமார், வேன் டிரைவர், அரசுப் பேருந்து ஓட்டுநர், கண்டக்டர் பேருந்துகளில் பயணம் செய்தவர்கள் காயமடைந்தனர்.
இதில் போலீஸ் வேனில் பயணம் செய்த காவல் உதவி ஆய்வாளர் அசோகுமார் மற்றும் அரசுப் பேருந்து ஓட்டுநர் பலத்த காயமடைந்தனர். இந்த விபத்தால் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதையடுத்து போலீசார் போக்குவரத்தை சீர் செய்தனர். விழுப்புரம் நான்கு முனை சந்திப்பில் விசிக வேட்பாளரை ஆதரித்து விசிக தலைவர் திருமாவளவன் பிரசாரம் செய்த போது வாகனங்கள் திருப்பி விடப்பட்டன.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!