பரபரப்பான சாலையில் அதிர்ச்சி.. போலீஸ் அதிகாரியை தாக்க முயன்ற இளம்பெண்.. பகீர் வீடியோ வைரல்!
பெங்களூரு இந்திராநகர் பகுதியில் இளம்பெண் ஒருவர் போக்குவரத்து காவல்துறை அதிகாரிகளை தாக்க முயன்றதாக கூறப்படுகிறது. இந்திராநகரில் உள்ள ஈஎஸ்ஐ மருத்துவமனை சந்திப்புக்கு அருகில் உள்ள பரபரப்பான சந்திப்பில் சோனம் என்ற பெண், வாகன ஓட்டுநர் ஒருவருடன் தகராறில் ஈடுபட்டதாகக் கூறப்படும் இந்தச் சம்பவம், வியாழக்கிழமை நிகழ்ந்தது.
நிலைமையை தணிக்க போக்குவரத்து போலீசார் தலையிட்டனர். சாட்சிகளின் கூற்றுப்படி, அதிகாரிகள் பெண்ணை அமைதிப்படுத்த முயன்றனர், ஆனால் அவர் தொடர்ந்து தகராறு செய்து போலீசாரை தாக்க முயன்றதாக கூறப்படுகிறது. அந்த வீடியோவில், பெண் போலீஸ் அதிகாரி ஒருவரின் காலில் மிதிக்க முயற்சிப்பது போல் தெரிகிறது. காட்சியில் இருக்கும் அனைத்து காவல்துறை அதிகாரிகளும் அசாதரணமான சூழ்நிலையை கட்டுக்கொள் கொண்டுவர முயற்சிக்கின்றனர். ஆனால் சோனம் வாக்குவாதத்தில் தொடர்ந்து ஈடுபட்டுள்ளார்.
இந்த சம்பவத்தின் போது அதிகாரிகளிடம் தவறாக நடந்து கொண்ட சோனம் மீது எஃப்ஐஆர் பதிவு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளதாக இந்திராநகர் போலீசார் உறுதி செய்தனர். சோனத்திற்கு மனநலப் பிரச்சினைகள் இருந்திருக்கலாம் என்றும், அதுவே அவரது நடத்தைக்கு காரணம் என்றும் போலீஸ் வட்டாரங்கள் சுட்டிக்காட்டின. வீடியோ காட்சிகளை ஆய்வு செய்து, சம்பவத்தின் முழு சூழலையும் புரிந்து கொள்ள கூடுதல் ஆதாரங்களை சேகரித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!
ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...
ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க
இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!