ஓடும் ரயிலில் அதிர்ச்சி.. தூங்கி கொண்டிருந்த இளம் பெண்ணுக்கு முத்தமிட்ட போதை ஆசாமி!
பாலக்காடு - சாலிமார் விரைவு ரயிலில் 42 வயது நபர் ஒருவர் 22 வயது இளம்பெண்ணிடம் சில்மிஷம் செய்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக கோவை போலீசார் அந்த நபரை கைது செய்து சிறையில் அடைத்தனர். ரயில் போக்குவரத்து என்பது குறைந்த செலவில் நீண்ட தூரம் பயணிக்க மக்கள் பயன்படுத்தும் ஒரு வகையான போக்குவரத்து ஆகும்.
ஏராளமான மக்கள் ரயில் போக்குவரத்தை நம்பியுள்ளனர். பயணிகள் போக்குவரத்திற்கு கூடுதலாக, சரக்கு போக்குவரத்தும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த 22 வயது இளம்பெண் ஒருவர் தனது குடும்பத்தினருடன் திருவனந்தபுரத்தில் இருந்து சென்னைக்கு பாலக்காடு-சாலிமார் விரைவு ரயிலில் திரும்பி வந்து கொண்டிருந்தார். இளம்பெண் தனது பெற்றோருடன் S14 பெட்டியில் தூங்கிக் கொண்டிருந்தார்.
அப்போது அதே பெட்டியில் பயணித்த 42 வயது பயணி ஒருவர் ரயில் என்று கூட பார்க்காமல் தூங்கிக்கொண்டிருந்த பெண்ணுக்கு நள்ளிரவு 1 மணியளவில் முத்தம் கொடுத்துள்ளார். இதை சற்றும் எதிர்பாராத அந்த இளம்பெண் அலறினார். சத்தம் கேட்டு பெற்றோர்கள் மற்றும் பயணிகள் அனைவரும் விழித்தனர்.சம்பவத்தை அந்த பெண் கூறியதையடுத்து, பயணிகள் அனைவரும் முத்தமிட்டவரை அடித்து உதைத்தனர். அந்த நபர் குடிபோதையில் இருந்தது தெரியவந்தது. பின்னர், ரயில் வந்ததும், கோவை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!
ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...
ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க
இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!