undefined

அதிர்ச்சி... தியாகி சங்கரய்யாவுக்கு திடீர் உடல்நலக்குறைவு... தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி!

 

சுதந்திர போராட்ட வீரரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான தியாகி என்.சங்கரய்யா திடீர் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் என்.சங்கரய்யாவுக்கு இன்று திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. சளி மற்றும் காய்ச்சல் காரணமாக ஆக்சிஜன் குறைவு ஏற்பட்டதால் அவர் உடனடியாக சென்னையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அவர் உடல் நலம் தேறி மீண்டும் நலம் பெற்று வர அனைத்து முயற்சிகளும் செய்யப்பட்டு வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இது குறித்த தகவலறிந்த கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், அரசியல் தலைமை குழு உறுப்பினர் ராமகிருஷ்ணன் ஆகியோர் மருத்துவமனைக்கு நேரில் சென்று சங்கரய்யாவிற்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவர்களை நேரில் சந்தித்து சிகிச்சை தொடர்பாக கேட்டறிந்தனர்.

தற்போது அவரது உடல் நிலையை கருத்தில் கொண்டு தொண்டர்கள் யாரும் மருத்துவமனைக்கு நேரில் சென்று அவரை பார்க்க முயற்சிக்க வேண்டாம் என சிபிஎம் தலைவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கடந்த ஜூலை 15ம் தேதி சங்கரய்யா தனது 101வது பிறந்தநாளை கொண்டாடி இருந்தது குறிப்பிடத்தக்கது.

ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க!

ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!