அதிர்ச்சி... 2வது திருமணத்திற்கு இடையூறு... 5 வயது மகளைக் கொடூரமாக கொன்ற தாய்!
தனது 2வது திருமணத்திற்கு இடையூறாக இருந்து வந்ததால், தனது 5 வயது மகளைக் கொடூரமாக கழுத்தை நெரித்து கொலைச் செய்து அதிர செய்திருக்கிறாள் இளம்பெண் ஒருவர்.
டெல்லி அசோக் விஹார் பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் தனது 5 வயது மகளுடன் வசித்து வந்தார். இந்நிலையில், அந்த பெண் தனது குழந்தையை இறந்த நிலையில் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். குழந்தையை பார்த்த டாக்டர்கள் அதிர்ச்சி அடைந்தனர். காரணம், குழந்தையின் கழுத்தில் கழுத்தை நெரித்ததற்கான அறிகுறிகள் இருந்தன.
இதுபற்றி போலீசாருக்கு மருத்துவர்கள் தகவல் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து விரைந்து வந்த காவல்துறையினர், விசாரணையை தொடங்கினர். தீவிர விசாரணையில் குழந்தையின் தாய் உண்மையை ஒப்புக்கொண்டார். பெண்ணின் கணவர் அவரையும், குழந்தையையும் தனியாக விட்டுச் சென்ற பிறகு, ராகுல் என்பவருடன் இன்ஸ்டாகிராமில் பழக்கம் ஏற்பட்டது.
அந்த பெண் ராகுலை திருமணம் செய்து கொள்ள எண்ணியிருந்தார். ஆனால் அந்த பெண்ணின் 5 வயது குழந்தையை ராகுலின் குடும்பத்தினர் ஏற்க மறுத்துவிட்டனர். இதனால் விரக்தியடைந்த அந்த பெண் தனது மகளை கழுத்தை நெரித்து கொன்றுள்ளார். இதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து குழந்தையின் தாயை கைது செய்தனர்.
கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!
ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!
கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!