வேலூரில் அதிர்ச்சி... 13 வயது சிறுமி கடத்தி கூட்டு பலாத்காரம்... குடிபோதையில் 3 இளைஞர்கள் வெறித்தனம்!
இது ஏதோ வடமாநிலங்களில் நடந்த கொடூரம் கிடையாது. வேலூரில் இப்படி பதைபதைக்க வைக்கும் சம்பவம் நிகழ்ந்துள்ளது. கொஞ்சம் கொஞ்சமாக தமிழகமும் உத்திரபிரதேசம், பீகார் போல மாறி வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தாலுகாவைச் சேர்ந்த மாட்டு வியாபாரியின் 13 வயது மகள் அந்த பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் 9ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த 16ம் தேதி காலை 7.30 மணியளவில் சிறுமி இயற்கை உபாதை கழிக்க தனது வீட்டின் அருகில் உள்ள புதர் மறைவிடத்திற்கு சென்றுள்ளார். அங்கு அணைக்கட்டு தாலுகா தாங்கல் கிராமத்தை சேர்ந்த வீரப்பன் (28), இளமாதன் (28), சின்னராசு (30) ஆகியோர் மது அருந்தி கொண்டிருந்த போது, போதையில் இருந்த 3 பேரும் சிறுமியின் வாயை பொத்தி சிறிது தூரம் தூக்கி சென்றனர். மூன்று பேரும் அவளை அங்கேயே வைத்து மாறி மாறி பலாத்காரம் செய்தனர்.
இதனிடையே வெளியே சென்ற மகள் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால் தந்தை தேடி சென்றுள்ளார். சிறிது தூரத்தில் மகளின் அலறல் சத்தம் கேட்டது. அதிர்ச்சியடைந்த அவர், அப்பகுதிக்கு சென்று பார்த்தபோது, அங்கு தனது மகள் அலங்கோலமான நிலையில் கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். வீரப்பன், இளமாதன், சின்னராசு ஆகியோர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். மூவரையும் விரட்டிச் சென்று பிடிக்க முயன்றார். ஆனால் அவர்கள் ஓடிவிட்டனர்.
அங்கு நடந்த சம்பவம் வெளியே தெரிந்தால் அவமானமாகி விடும் என்று எண்ணி மகளை உடனடியாக உறவினர் வீட்டுக்கு அனுப்பி வைத்தார். மகளின் உடல்நிலை மிகவும் மோசமாக இருந்ததால், மனம் உடைந்த தொழிலாளி, நேற்று முன்தினம் பள்ளிகொண்டா போலீசில் புகார் அளிக்க சென்றார். எல்லைப் பிரச்னை காரணமாக அவரது புகாரை பெறாமல் பள்ளிகொண்டா, வேப்பங்குப்பம் போலீசார் அலைக்கழித்துள்ளனர். இதற்கிடையில் வீரப்பன் மற்றும் மூவரும் தலைமறைவாகினர்.
இந்நிலையில் நேற்று வேலூர் அனைத்து மகளிர் போலீசில் சிறுமி அளித்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் காஞ்சனா விசாரணை நடத்தி வீரப்பன், மதன், சின்னராசு ஆகிய 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து 3 பேரையும் தேடி வந்தார்.
இந்நிலையில் மூவரையும் கைது செய்த போலீசார் ரகசிய இடத்தில் வைத்து தொடர்ந்து விசாரணை நடத்தி மூவர் மீதும் பிஓஎஸ் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர். 13 வயது பள்ளி மாணவியை 3 பேர் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!
ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்..!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!
கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!