undefined

காலையிலேயே அதிர்ச்சி... ராமேஸ்வரம் மீனவர்கள் 17 பேர் இலங்கை கடற்படையினரால் கைது!

 

காலையிலேயே அதிர்ச்சியளிக்கும் விதமாக ராமேஸ்வரம் மீனவர்கள் 17 பேர், இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள தகவல் வெளியாகி உள்ளது. கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரத்தைச் சேர்ந்த தமிழக மீனவர்களை 2 படகுடன் இலங்கை கடற்படை சிறைபிடித்துச் சென்றனர்.

ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள் 17 பேரை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கச்சத்தீவு அருகே கடல் பகுதியில் மீன்பிடித்து கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 17 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்து, அவர்களிடம் இருந்த 2 படகுகளையும் பறிமுதல் செய்து சிறைபிடித்து அழைத்து சென்றுள்ளனர். 

தமிழக மீனவர்கள் எல்லைத்தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படையினர் தொடர்ந்து தமிழக மீனவர்களை கைது செய்யும் போக்கு அதிகரித்துள்ளது. மீனவர்கள் தொடர்ந்து பல கட்ட போராட்டங்கள் நடத்தியும், மாநில அரசும், மத்திய அரசும் மீனவர்களின் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண முன்வரவில்லை.  இந்நிலையில், ராமேஸ்வரத்தைச் சேர்ந்த தமிழக மீனவர்கள் 17 பேரை இலங்கை கடற்படையின் சிறைப்பிடித்து கைது செய்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

பாமக, அதிமுக, நாம் தமிழர் கட்சியினர், தேமுதிக என எதிர்கட்சிகள் ஒன்றிணைந்து மீனவர்களின் பிரச்சனைக்கு குரல் கொடுத்த நிலையிலும் எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் மீனவர்களின் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண்பதில் அக்கறை எடுப்பதிலை. இலங்கை கடற்படையின் அட்டூழியத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க முடியாமல், அவர்கள் தமிழக மீனவர்களைக் கைது செய்யும் போக்கு தொடர்ந்து வருகிறது. 

இந்தியா, இது குறித்து தனது எதிர்ப்பைக் கூட இலங்கையிடம் ஒரு போதும் தெரிவித்ததில்லை. மத்திய அரசு தமிழக மீனவர்களின் கைதுக்கு இதுவரை ஒருமுறை கூட கண்டனம் தெரிவித்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது. காங்கிரஸ் ஆட்சியிலும் தொடர்ந்த இந்த நிலை, கடந்த 10 வருட பாஜக ஆட்சியிலும் தொடர்கதையாகவே இருந்து வருகிறது. 

இந்நிலையில் கச்சத்தீவு பகுதிகளில் மீன்பிடித்துக் கொண்டிருந்த 17 மீனவர்களைக் கைது செய்து அழைத்து சென்றுள்ளனர். கைது செய்யப்பட்ட மீனவர்கள் அனைவரையும் மன்னார் கடற்படை முகாமுக்கு அழைத்துச் சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. சமீபத்தில் இலங்கையில் ஆட்சி மாறிய நிலையில், இலங்கையின் அட்டூழியம் அதிகரித்துள்ளது.

அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!

செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசி மாதத்தில் ஏன் அசைவம் சாப்பிடக்கூடாது ... விஞ்ஞான விளக்கம்!