undefined

காலையிலேயே அதிர்ச்சி... வர்த்தக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ரூ.38 உயர்வு!

 

சென்னையில் காலையிலேயே அதிர்ச்சியளிக்கும் விதமான வணிகப் பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ரூ.38 உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த மாதம்  வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ரூ.7.50 உயர்த்தப்பட்ட நிலையில், இம்மாதம் ரூ.38 உயர்த்தப்பட்டுள்ளது. 

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப, சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன. அந்த வகையில் ஒவ்வொரு மாதமும் 1ம் தேதி எண்ணெய் நிறுவனங்கள் புதிய விலையை நிர்ணயித்து அறிவிக்கின்றன.

இந்நிலையில், இன்று செப்டம்பர் 1ம் தேதி மாற்றம் செய்யப்பட்ட விலை பட்டியில் அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் வீட்டு பயன்பாட்டிற்கான கேஸ் சிலிண்டர் விலையில் எந்தவிதமான மாற்றமும் இல்லாமல் பழைய விலையான ரூ.818.50க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதே சமயம், வர்த்தக பயன்பாட்டுக்கான 19 கிலோ எடை கொண்ட சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.38 உயர்த்தப்பட்டுள்ளது. 

வர்த்தக பயன்பாட்டுக்கான 19 கிலோ எடை கொண்ட சமையல் எரிவாயு சிலிண்டர் விலை கடந்த மாதம் ரூ.1,817 ஆக இருந்த நிலையில், இன்று முதல் 38 ரூபாய்  உயர்த்தப்பட்டு ரூ.1,855க்கு விற்கப்படும் என பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளது.

ஆவணி மாத சிறப்புக்கள் , வழிபாடுகள், பண்டிகைகள்!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா