undefined

அதிர்ச்சி... அமெரிக்காவில் எச்-1பி, எல்-1 விசா கட்டணங்கள் இருமடங்கு உயர்வு!

 

ஒரு காலத்தில் பார்த்தாலும் அரசாங்க உத்யோகமாக பார்க்க வேண்டும் என்று நினைத்திருந்தவர்கள், வெளிநாடுகளில்... குறிப்பாக அமெரிக்காவுக்கு வேலைக்கு செல்ல வேண்டும்... அதன் பின்னர் அங்கேயே செட்டிலாகி விட வேண்டும் என்பதையே வாழ்நாள் கனவாக வைத்திருக்கின்றனர். கடந்த 2004ம் ஆண்டு முதல் இந்தியர்கள் உட்பட வெளிநாட்டினர்களுக்கு எச்-1பி வகை விசாக்களை அமெரிக்கா வழங்கி வருகிறது.

எச்1பி வகை விசா என்பது அமெரிக்காவில் உள்ள நிறுவனங்கள் வெளிநாட்டு பணியாளர்களுக்கு வழங்கப்படும் குறுகிய கால அனுமதி தான். அதாவது 3 ஆண்டுகள் அமெரிக்காவில் தங்கியிருப்பதற்கான அனுமதி. அமெரிக்க குடியுரிமைக்கான அனுமதி அல்ல. எச்-1பி விசா வைத்திருந்து 6 ஆண்டுகளுக்கு மேலாக அமெரிக்காவில் பணிபுரிபவர்கள் அமெரிக்க குடியுரிமை பெறுவதற்கான கிரீன் கார்டு பெற விண்ணப்பிக்கலாம்.  

 எல்-1 விசா என்பது சர்வதேச நிறுவனத்தில் நிர்வாக அல்லது நிர்வாக மட்டத்தில் இருப்பவர்களுக்கு மட்டும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. சர்வதேச நிறுவனத்தில் பணிபுரிபவர்கள் அமெரிக்காவிற்கு மாற்றப்பட்டாலும் இதே விசா செல்லுபடியாகும்.  இந்நிலையில், பிரபலமான H-1B, L-1 மற்றும் EB-5 போன்ற பல்வேறு வகையான விசாக்களுக்கான கட்டணத்தை அமெரிக்கா உயர்த்தியுள்ளது.   அதன்படி, எச்1பி விசாக்களுக்கான கட்டணம் 780 டாலர் அதாவது  இந்திய ரூபாயில் 64,731 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே ரூ.38,174 ஆக இருந்த நிலையில், தற்போது ரூ.64,731 ஆக உயர்த்தப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது. அதே போல் எல்-1 விசாக்களுக்கான கட்டணம் 1,385 டாலர் அதாவது இந்திய மதிப்பில் ரூ.1,14,939 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே, 38,174 ரூபாயாக இருந்து வந்த நிலையில், ரூ.1,14,939 ஆக உயர்த்தப்பட்டிருப்பது  பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதே போல்  EB-5 விசாக்களுக்கான கட்டணம் 11,160 டாலர் அதாவது  இந்திய மதிப்பில் ரூ.9,26,153 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. ரூ.3,04,983 ஆக இருந்த நிலையில் தற்போது ரூ.9.26 லட்சமாக உயர்த்தப்பட்டு இருப்பது அங்கு பணிபுரியும் வெளிநாட்டினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த கட்டண உயர்வு  ஏப்ரல் 1ம் தேதி அமலுக்கு வரும் என அமெரிக்கா அறிவித்துள்ளது. இந்த திடீர்  கட்டண உயர்வால், அடுத்த 10 ஆண்டுகளில் பொதுமக்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் 157 மில்லியன் டாலர் அதாவது இந்திய மதிப்பில் ரூ.1,302 கோடி செலவாகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.   

தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?

தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்....!

தை வெள்ளிக்கிழமை... மறந்தும் இதை மட்டும் செய்துடாதீங்க!

தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க