undefined

ஷாக்.. பிரதமர் மோடிக்கு கொலை மிரட்டல்.. பெண்ணை அதிரடியாக கைது செய்த போலீசார்!

 

நேற்று (நவம்பர் 27) மும்பை போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. அதில், பிரதமர் நரேந்திர மோடிக்கு பெண் ஒருவர் கொலை மிரட்டல் விடுத்ததாக பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. அதன் அடிப்படையில் மும்பை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளதாகவும் கூறப்பட்டது.

இதையடுத்து, வழக்கை விசாரித்த மும்பை போலீசார், மும்பை புறநகர் பகுதிக்கு வெளியில் இருந்து போன் வந்ததாகவும், ஒரு பெண்ணை விசாரணைக்காக கைது செய்ததாகவும் தெரிவித்தனர். விசாரணையில் அந்த பெண் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்றும், அவர் மீது வேறு எந்த குற்ற வழக்குகளும் இல்லை என்றும் தெரியவந்துள்ளதாக பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

முன்னதாக நவம்பர் 12ஆம் தேதி சத்தீஸ்கரை சேர்ந்த பைசன் கான் என்ற இளைஞர், நடிகர் ஷாருக்கானுக்கு கொலைமிரட்டல் விடுத்ததாக மும்பை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!