அதிர்ச்சி... பாகிஸ்தானில் பயங்கர குண்டுவெடிப்பு; 2 சிறுவர்கள் பலி.. 16 பேர் படுகாயம்!
பாகிஸ்தானில் சமீப காலமாக பயங்கரவாத தாக்குதல்கள் அதிகரித்து உள்ளன. குறிப்பாக போலீஸ் நிலையங்கள் மற்றும் ராணுவ முகாம்களை குறிவைத்தும் தாக்குதல் நடைபெறுகிறது. இதனால் பயங்கரவாதத்தை கட்டுப்படுத்த அரசாங்கம் பல்வேறு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. எனினும் அவ்வப்போது தாக்குதல்கள் அரங்கேறுகின்றன.
இந்நிலையில் பலுசிஸ்தான் மாகாணம் பிஷின் நகரில் ஒரு மோட்டார் சைக்கிள் சென்று கொண்டிருந்தது. அங்குள்ள போலீஸ் தலைமையகம் அருகே சென்றபோது அந்த மோட்டார் சைக்கிள் திடீரென வெடித்து சிதறியது. இதனால் அப்போது சாலையில் நடந்து சென்ற 2 சிறுவர்கள் உடல் சிதறி பலியாகினர். மேலும் போலீஸ் சூப்பிரண்டு உள்பட 16 பேருக்கு படுகாயம் ஏற்பட்டது.
மீட்பு படையினர் அவர்களை மீட்டு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை உயரும் என அஞ்சப்படுகிறது.
இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில், மோட்டார் சைக்கிளில் மர்ம நபர்கள் வெடிகுண்டு பொருத்தியதும், போலீஸ் நிலையம் அருகே சென்றபோது அதனை வெடிக்கச் செய்ததும் தெரிய வந்துள்ளது.
எனினும் இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்தவொரு பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. எனவே போலீசார் வழக்குப்பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையே தாக்குதலில் உயிரிழந்த சிறுவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் ஷபாஸ் ஷெரீப் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். மேலும் தாக்குதலுக்கு காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவும் போலீசாருக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.
ஆவணி மாத சிறப்புக்கள் , வழிபாடுகள், பண்டிகைகள்!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா